ருதுராஜ் கூட தோனி இருக்கிறது பெரிய சுமை.. இந்த முடிவு சரி வராது – வாசிம் ஜாபர் வெளிப்படையான விமர்சனம்

0
191
Ruturaj

இன்று ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு, இளம் வீரர் ருதுராஜை புதிய கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இதற்கு கலவையான அபிப்பிராயங்கள் காணப்படுகிறது.

மகேந்திர சிங் தோனிக்கு ஏறக்குறைய இது கடைசி ஐபிஎல் சீசன் என்பது முடிவாகிறது. எனவே இந்தக் காரணத்தினால் அவரது ரசிகர்கள் அவரை கேப்டனாக பார்க்க நினைத்து இருந்தார்கள். ஆனால் தோனி வேறு விதமாக யோசித்து ருதுராஜை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

தோனியின் இந்த முடிவு சரியானதாக இருக்குமா என்பது குறித்து கேள்விகள் கிரிக்கெட் மட்டத்தில் அலசப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தோனியின் முடிவுகள் தவறாக இருக்காது, அவர் அணியின் நலனை சிந்தித்துதான் எப்பொழுதும் முடிவுகள் எடுப்பார் என்று கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் உள்நாடு மற்றும் இந்திய அணிக்காக ஆசிரிய விளையாட்டுப் போட்டியில் தலைமை தாங்கி இருக்கும் ருதுராஜின் கேப்டன்சி அணுகுமுறை மற்றும் அந்த நேரத்தில் அவருடைய பேட்டிங் அணுகுமுறை ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது கேப்டன் பொறுப்பு அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது தெரிகிறது.

தோனியின் முடிவு சரி வராது

தோனியின் முடிவு குறித்து பெரும்பாலும் யாரும் அழுத்தமாக அதிருப்தி தெரிவிக்காத நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மட்டும், தோனியின் இந்த முடிவு சரியானதாக இல்லை என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இப்பொழுது இவரது பேச்சு சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் கூறும் பொழுது “இது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. தோனி ருதுராஜின் உடன் இல்லாமல் இருந்தால், இந்த முடிவு இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். அவர் மொத்தமாக ஓய்வு பெற்று விட்டார் அருகில் இல்லை என்கின்ற பொழுது, அது யாருக்கும் கேப்டன் பொறுப்பை செய்வதற்கு எளிதான ஒன்றாக இருந்திருக்கும். இப்பொழுது தோனி அணிக்குள் இருப்பது இந்த வேலையை கடினமாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை தோனி சும்மா தரல.. ருதுராஜின் கேப்டன்சி பேட்டிங் ரெக்கார்ட்

களத்தில் கேப்டனாக ருதுராஜ் ஏதாவது முடிவுகள் எடுக்கும் பொழுது, அந்த முடிவுகள் தோனிக்கு சம்மதமா இல்லையா என்பது குறித்து அவர் யோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதுவே தோனி இல்லாமல் இருந்தால் இந்த சூழ்நிலை அவருக்கு ஏற்படாது. எனவே தற்போது கேப்டன் பொறுப்பு ருத்ராஜுக்கு கடினமாக மாறுகிறது” என்று கூறியிருக்கிறார்.