பல வருட காத்திரப்புக்கு விடை கொடுக்கும் விதமாக இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்திருக்கிறது.
அந்த சாதனையோடு இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்திருக்கின்றனர். இவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டு வீரர்களில் 6 பேர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
டி20 உலக கோப்பையை வென்ற கையோடு சர்வதேச டி20 ஃபார்மெட்டில் இருந்து மூன்று இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு அறிவித்திருக்கின்றனர். அதில் முதலாவதாக இந்திய அணியை வீரர் ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு டி20 ஃபார்மெட்டில் ஆரம்பித்து தற்போது அதிலேயே தனது ஓய்வு அறிவித்திருக்கிறார். இதில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் குவித்துள்ளார். அடுத்ததாக விராட் கோலி 125 டி20 போட்டிகளில் விளையாடி 4188 ரன்கள் குவித்துள்ளார். அடுத்ததாக ஜடேஜா 74 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் மற்றும் 54 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்த டி20 உலக கோப்பையோடு தனது ஓய்வையும் அறிவித்துள்ளார். சூப்பர் 8 போட்டியில் இவர் இந்தியாவுக்கு எதிராக குவித்த 24 ரன்கள் இவரது கடைசி போட்டியாக அமைந்திருக்கிறது. வார்னர் இதுவரை 110 போட்டிகளில் விளையாடி 3277 ரன்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிரண்ட் போல்ட் சர்வதேச டி20 ஃபார்மெட்டுக்கு விடை கொடுத்துள்ளார். இவர் மற்ற நாடுகளில் நடைபெறும் பிரான்சிஸ் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போல்ட் இதுவரை நியூஸிலாந்து அணிக்காக 61 போட்டிகளில் விளையாட 83 விக்கட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மேலும் இவர்களை தவிர வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச டி20யிலிருந்து தங்கள் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். பங்களாதேஷின் மூத்த கிரிக்கெட் வீரரான முகமதுல்லா, நமீபியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான டேவிட் வைஸ், நெதர்லாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் உகாண்டாவின் பிரைன் மசாபா ஆகிய ஒன்பது வீரர்கள் டி20 ஃபார்மெட்டில் தங்களது ஓய்வு அறிவித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:துருவ் ஜுரேல் விக்கெட்டை அப்படி கொண்டாட காரணம்.. என் காதலி தான்.. ஜிம்பாப்வே பவுலர் வினோத விளக்கம்
டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒன்பது வீரர்கள் :
விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வார்னர், டிரெண்ட் போல்ட், முகமதுல்லா, டேவிட் வைஸ்,சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், பிரைன் மசாபா.