துருவ் ஜுரேல் விக்கெட்டை அப்படி கொண்டாட காரணம்.. என் காதலி தான்.. ஜிம்பாப்வே பவுலர் வினோத விளக்கம்

0
580
Jongwe

நேற்று இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலையில் துருவ் ஜுரல் விக்கெட்டை கைப்பற்றிய ஜிம்பாப்வே அணியின் மிதவேக பந்துவீச்சாளர் லுக் ஜாங்வே தனது ஷூவை கழட்டி போன் செய்வது போல வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, தோல்வியை விட அதிகமாக இந்திய ரசிகர்களை பாதித்திருக்கிறது. தற்பொழுது இது குறித்து அவர் ஏன் அப்படி கொண்டாடினேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை குறை சொல்லவே முடியாது. ரவி பிஸ்னாய் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் விளையாடி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணியின் வெற்றி மிக எளிதாக இருக்கும் என இந்திய ரசிகர்கள் நம்பி இருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் மிக மோசமாக விளையாடிய இந்திய அணி விக்கெட்டுகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. ஏழு பேட்ஸ்மேன் கலை கொண்டு விளையாடிய இந்திய அணி முதல் ஐந்து விக்கெட்டுகளை முதல் பாதி ஆட்டத்திலேயே இழந்துவிட்டது. இதன் காரணமாக விக்கெட் கைவசம் இல்லாததால் இந்திய அணி பரிதாபமாக 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தப் போட்டியில் கில் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் லுக் ஜாங்வே பந்துவீச்சில் அவசரப்பட்டு அடித்து விளையாட சென்று துருவ் ஜூரல் ஆட்டம் இழந்தார். அப்போது லுக்கு ஜான்வே தன்னுடைய ஷூவை கழட்டி போன் செய்வது போல வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஏன் என லுக் ஜாங்வே கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் என் காதலி பிரண்டாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது விக்கெட் கைப்பற்றினால் எப்படி கொண்டாடலாம்? என்பது குறித்துபேசினோம். அடுத்த நாள் ஹோட்டல் அறையில் இப்படியான விக்கெட் கொண்டாட்டத்தை நான் கொண்டு வந்தேன். மேலும் அதையே களத்தில் செய்தேன்.

இதையும் படிங்க : நிறைய பேர் வருவாங்க போவாங்க.. ஆனா இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி.. இதுதான் காரணம் – கம்பீர் பிறந்தநாள் வாழ்த்து

நான் ஒவ்வொரு முறை விக்கெட் எடுக்கும் பொழுதும் என் காதலிக்கு போன் செய்வேன் என்று கூறியிருந்தேன். இதன் காரணமாகவே நான் விக்கெட் கைப்பற்றும்போது அவளுக்கு போன் செய்வதாக நான் அந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -