“இங்கிலாந்து லோக்கல்லயே இந்த பையனை எந்த டீமும் சேர்த்துக்கல.. ஆனா இந்தியாவுல” – நிக் நைட் பேச்சு

0
203
Bashir

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடுகிறார்கள்? இல்லை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கும் பொழுது, எதிரணியின் அனுபவமற்ற சுழல் பந்துவீச்சாளர்களும் திறமையாக மாறிவிடுகிறார்களா? என்பது இந்த தொடரில் புரியாத புதிராகவே இருக்கிறது.

கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்ட பொழுது இந்திய பந்துவீச்சாளர்கள் அதில் சிறப்பாக வீசினார்கள். அதே சமயத்தில் முதல் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்ட பொழுது, இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் சுமாராக செயல்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுவே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அடி வாங்கும் இங்கிலாந்து அனுபவம் மற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இது என்ன மாதிரி செயல்படுகிறது என்று புரிவதில்லை.

இன்று டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அறிமுக சுழல் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்து அணியை வெல்ல வைத்தார்.

இதேபோல் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடுகளத்தில் இந்திய அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் தடுமாற, இங்கிலாந்து அனுபவம் அற்ற சுழல் பந்துவீச்சாளர் ஆன சோயப் பஷீர் மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட் தற்பொழுது கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இன்று அவர் மொத்தம் 32 ஓவர்கள் பந்து வீசி 73 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து அதில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இவர் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் பெரிய அளவில் அனுபவமே இல்லாதவர். தற்பொழுதுதான் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் சோயப் பஷீர் பற்றி பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் கூறும்பொழுது ” கடைசி இரண்டு வருடங்களாக இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவர் முதன் முதலில் இங்கிலாந்து சர்ரெ கிளப்பில் சென்ற பொழுது, இவரை சேர்த்துக் கொள்ளவில்லை. அடுத்து மிடில் சக்ஸ் அணி. உள்நாட்டில் யாரும் இவரை சேர்த்துக் கொள்ளவில்லை.

இதற்கு அடுத்து சிறு சிறு மாவட்ட அணிகளில் இருந்தார். கடைசியாக இவருக்கு வாய்ப்பு கொடுத்தது சோமர்செட் அணிதான். ஆனால் தற்பொழுது இவர் இங்கிலாந்து கிரிக்கெட் உடையில் சிறப்பாக செயல்படுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.