அடுத்த மேட்ச் இஷான் பதில் கேஎல் ராகுல்.. கைஃபை வாயடைக்க வைத்த கம்பீர்.. நடந்த காரசார விவாதம் பற்றிய முழு விவரம்.!

0
668

. பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடின. இதில் இந்திய அணி 266 ரன்கள் ஆல் அவுட் ஆனது .

இரண்டாவது பேட்டிங் இன் போது மழை பெய்ததால் இந்தப் போட்டி மேலும் தொடர இயலவில்லை. இதனால் டிராகன் அறிவிக்கப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது சிறப்பாக செயல்பட்ட இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தனர் இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்தாவது விக்கெட் இருக்கு இந்திய ஜோடியால் எடுக்கப்பட்ட சாதனையாக இருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இஷான் கிசான் 82 ரன்களும் ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக கேஎல் ராகுல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய கேஎல் ராகுல் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று மீண்டும் அணிக்குள் திரும்ப தயாராக உள்ளார். ஆசியக் கோப்பை தொடரின் 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று இருந்த அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்

தற்போது கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை பெற்றிருப்பதாகவும் மேலும் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும் போது கே எல் ராகுல் விளையாட்டு தயாராக இருப்பதாகவும் இந்திய அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் கே எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பினால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது இசான் கிசான் விக்கெட் கீப்பராக தொடரலாமா என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான முகமது கைஃப் மற்றும் கௌதம் கம்பீர் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய முகம்மது கைஃப்” கேஎல் ராகுல் இந்திய அணிக்காக ஐந்தாவது இடத்தில் விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். மேலும் அவர் அணியில் இருந்து வெளியேறியது காயம் காரணமாக தானே தவிர மோசமான பேட்டிங்கால் இல்லை. மேலும் இசான் கிசான் இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆனாலும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பும் போது இஷான் கிசான் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் ஏனென்றால் கே எல் ராகுல் கிளாஸ் யாராலும் ஈடு செய்ய முடியாது என தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசிய கௌதம் கம்பீர் ” இசான் கிசான் இருக்கும் இடத்தில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இருந்தால் இப்படித்தான் பதில் சொல்வீர்களா.? உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு அணி வீரரின் ஃபார்மை வைத்து தான் அவரை தேர்வு செய்ய வேண்டும் . பெயரை வைத்து அல்ல. இசான் கிசான் தொடர்ச்சியாக நாலு அரை சதங்களை எடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரை வெளியே வைத்துவிட்டு கே என் ராகுலுக்கு எப்படி இடம் கொடுக்க முடியும்?” என காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய கம்பீர்” ஒரு வீரர் காயத்தால் வெளியேறும்போது அவருக்காக விளையாடும் மற்றொரு வீரர் தனது திறமையை நிரூபித்தால் அவர்தான் அணியில் தொடர்வார் . இது தவிர்க்க முடியாத ஒன்று . விளையாட்டில் இது இயல்பானது . இசான் கிசான் அதிகப்போட்டியில் விளையாடவில்லை என்பதற்காக அவர் தற்போது இருக்கும் பார்மை மறந்து அவரை அணியில் இருந்து நீக்க முடியுமா.? நிறைய கிரிக்கெட் வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறும் போது அவர்களிடத்தில் விளையாடும் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து சிறப்பாக விளையாடினால் அந்த வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் . வெளியேறிய வீரர்கள் மீண்டும் தங்களது திறமையை நிரூபித்து அணைக்குள் திரும்ப வேண்டும். நிறைய வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள் நிறைய வீரர்கள் திரும்பவில்லை . இது விளையாட்டில் இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்று என்று தெரிவித்தார். மேலும் பார்மை வைத்து தான் உலகக் கோப்பையை வாங்க முடியுமே தவிர பெயரை வைத்து வாங்க முடியாது எனவும் கண்டிப்புடன் கூறினார்.