“அடுத்த கோலி டிவிலியர்ஸ் இந்த ரெண்டு பசங்கதான்” – ஏபி.டிவில்லியர்ஸ் சுவாரசியமான கணிப்பு!

0
200
Devilliers

கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஆனால் சில வீரர்கள் மட்டுமே புதிய விஷயங்களுக்கு அடித்தளம் போடும் வீரர்களாக, தாக்கத்தை தரக்கூடிய, வீரர்களாக, முன்மாதிரி வீரர்களாக இருக்கிறார்கள்.

இந்த வகையில் உலக கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால், தென் ஆப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் மிக முக்கியமானவர்கள்.

- Advertisement -

சமகாலத்தில் எடுத்துக் கொண்டால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை அணுகக்கூடிய முறையை, தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையால் மாற்றி அமைத்தார். அவர் காலத்திற்குப் பிறகு வந்தவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பார்த்து வந்தவர்கள்.

அதேபோல் ஏபி.டிவில்லியர்ஸ் நவீன கிரிக்கெட்டில் ரன்களை தேடுவதற்கான ஷாட்களில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தார். இன்று நவீன கிரிக்கெட் வடிவமான டி20ல் அவருடைய தாக்கம் நிறைய இளம் வீரர்களிடம் இருக்கிறது.

இந்திய ரன் மெஷின் விராட் கோலியை எடுத்துக் கொண்டால், கடின பயிற்சி, சீராக ரன்கள் குவிப்பது, உடல் தகுதியை பராமரிப்பது என்று அவர் புதிய இலக்குகளை வைத்து உழைத்து, கிரிக்கெட் தாண்டி பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் இப்படி ஒற்றுமையைக் கொண்டு இருந்தபோதில், ஐபிஎல் தொடர் இவர்களை நண்பர்களாகவும் ஒருங்கிணைத்தது. இவர்கள் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி, இன்று மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது விராட் கோலி பற்றி பேசியுள்ள ஏபி.டிவில்லியர்ஸ் “எல்லோரும் வயதிற்கு ஏற்ப முதிர்ச்சி அடைகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வளரும் பொழுது அனுபவம் வாய்ந்த வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் எதிரணி வீரராக இருந்தாலும், அமைதியான மற்றும் நிதானமான நபர்கள் என்பதை புரிந்து கொள்கிறீர்கள்.

விராட் கோலி புத்திசாலி மற்றும் சில பயிற்சியாளர்கள் இடமிருந்து சரியான விஷயங்களை எடுத்து இருக்கிறார். ஆர்சிபி அணியில் மார்க் பவுச்சர் பயிற்சியாளராக இருந்த பொழுது விராட் கோலிக்கு முக்கியமானவராக இருந்தார். விராட் கோலி இடம் நண்பராக எனக்கும் அவர் மீது செல்வாக்கு இருந்தது. அவர் சரியான சமநிலையை கண்டுபிடித்தார். உலகக் கோப்பையில் அவர் செயல்படுவதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. இந்தியாவுக்காக மிகச் சிறப்பான விஷயங்களை செய்வார்” என்று கூறியிருக்கிறார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய இளம் வீரர் திலக் வர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் குட்டி ஏபிடி என அழைக்கப்படும் டிவால்ட் பிரிவியஸ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது குறித்து டிவிலியர்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் கூறிய டிவிலியர்ஸ் “திலக் மற்றும் பிரிவியஸ் இருவரும் மிகவும் நன்றாக நெருங்கி பழகுகிறார்கள். இவர்கள் இருவரும் மிகவும் திறமையான வீரர்கள். அவர்கள் தங்கள் உடல் மற்றும் மனதை சரியாக கவனித்துக் கொண்டால் எதிர்காலத்தில் பெரிய வாழ்க்கையைப் பெறுவார்கள். அவர்கள் தங்களுடைய மூளையை சரியான வழியில் செலுத்த வேண்டும். நீங்கள் கேட்கின்ற எல்லா விஷயத்தையும் செய்யக்கூடாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும்!” என்று அறிவுரை கூறியிருக்கிறார்!