முடிந்த ஆசிய கோப்பை.. உடனே ஆஸி ODI தொடரில் ஆடும் இந்தியா.. முழு அட்டவணை விபரங்கள் இதோ.!

0
17640

இந்த வருடம் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது.

இதற்கு அடுத்து ஏறக்குறைய ஒரு மாதக்காலம் ஓய்வில் இருந்த இந்திய அணி, மீண்டும் திரும்பி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து, மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது.

- Advertisement -

இதற்கு அடுத்து அங்கிருந்து ஒரு அணி காயத்தில் இருந்த திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயர்லாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இந்த நிலையில் முழுமையாக ஒன்று சேர்ந்த இந்திய அணி நேற்று நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. மேலும் ஆசியக் கோப்பையை கைப்பற்றியும் இருக்கிறது.

தற்பொழுது இந்த வெற்றி இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும் இந்திய அணி நிர்வாகம் எந்தெந்த இடங்களுக்கு யார்? யார்? என்று முடிவுக்கு வருவதற்கு இந்த தொடர் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் துவங்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதே ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தனது முதல் போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!