“அடுத்து 100வது டெஸ்ட்.. ரோகித் உங்களை கேப்டனாக விடுவார்?” – கவாஸ்கருக்கு அஸ்வின் பதில்

0
655
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது நான்காவது போட்டி நடந்து வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீச்சில் செயல்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனாலும் மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் அணியாக இணைந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் இந்திய அணியை முன்னணியில் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பும்ரா பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இந்த தொடரில் அமைந்து இருந்தது.

- Advertisement -

பொதுவாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் கைப்பற்றுவது என்பது இயல்பான ஒன்றாக ரசிகர்களுக்கு பதிந்து போனது. எனவே அவர் விக்கெட் இல்லாமல் இருப்பதைபார்ப்பதற்கு அவர்களால் நம்ப முடியவில்லை. மேலும் இதனால் அவரைச் சுற்றி விமர்சனங்களும் உருவானது.

அதே சமயத்தில் வென்றால் தொடரை கைப்பற்றலாம், தோற்றால் இங்கிலாந்து தொடரை சமன் செய்வதோடு ஐந்தாவது போட்டிக்கு வரும் என்கின்ற முக்கியமான நான்காவது போட்டியில் பும்ரா இல்லாத நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறார்.

இன்று அவர் பதினைந்து புள்ளி ஐந்து ஓவர் பந்துவீசி 52 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து 145 ரன்னில் சுருண்டது. இந்திய அணி நாளை 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான வாய்ப்பில் இருக்கிறது. இதற்கு அடுத்து தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் பேட்டியில் ஈடுபட்ட கவாஸ்கர் பேசும் பொழுது “இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெறும். நீங்கள் இங்கிருந்து தரம்சாலா மைதானம் செல்வீர்கள். உங்களுக்கு அது நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டி. எனவே நீங்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கட்டுக்கு செய்துள்ள மிகப்பெரிய செயல்களுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு, ரோகித் சர்மா உங்களை களத்தில் கேப்டனாக செயல்பட அனுமதிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : “போட்டி இன்னும் முடியல.. நாளைக்கு இந்தியாவின் 10 விக்கெட்டையும் எடுப்போம்” – சோயப் பஷீர் சவால்

இதற்கு பதில் அளித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது “கவாஸ்கர் பாய் நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள். உண்மையில் இந்த விஷயங்களில் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. நான் இந்த மாதிரி எல்லாவற்றையும் கடந்து விட்டேன். இந்திய அணிவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகிறேன். அது எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.