இது லிஸ்டிலே இல்லையே… உலக கோப்பையை வெல்ல இந்திய பிரபலத்தை வைத்து நியூசிலாந்து மாஸ்டர் பிளான்

0
1251

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தொடராக கருதப்படும் இந்த நிகழ்விற்கு எந்த அணியும் தீவிரமாக தயாராகுவது போல் தெரியவில்லை.

ஆஸ்திரேலிய அணி தற்போது தான் ஆசஸ் டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு தாயகம் திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் தற்போது ஸ்லீப்பிங் மோடுக்கு சென்று விட்டது.

- Advertisement -

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதுதான் அவர்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தான் அணியும் தற்போது எந்த தொடரிலும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து மட்டும்தான் உலககோப்பை தொடர்காக தங்களை தீவிரமாக தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி முகாமில் பங்கேற்று உலக கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வதற்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு மாஸ்டர் பிளான் தீட்டு இருக்கிறது.அதன்படி இந்திய வீரர்களின் நுணுக்கங்கள் மற்றும் ஆடுகளங்களில் தன்மை குறித்து நன்கு தெரிந்த சௌரப் வால்கர் என்ற இந்திய நிபுணரை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. செளரப் வால்கர் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது? மற்ற வீரர்கள் எப்படி பந்துகளை வீசுவார்கள் போன்ற நுணுக்கங்களை வீரர்களுக்கு எடுத்துரைப்பார்.

சௌரப் வால்கர் மும்பை ரஞ்சி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். இதை போன்று ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளிலும் சௌரப் வால்கர் செயல்பட்டு இருக்கிறார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹெண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் அணிக்காக வால்கர் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

நியூசிலாந்த அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்துடன் டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.இதுதான் வால்க்கருக்கு முதல் பணியாகும். இது குறித்து பேசிய வால்கர் இந்திய ஆடுகளம் இந்த உலகக் கோப்பை தொடரில் முக்கிய பங்காற்றும். அதற்கு என்னுடைய தனி கவனம் இருக்கும்.

ஆடுகளத்தை பொறுத்து ஆட்டத்தின் நுணுக்கங்களை நான் வகுப்பேன். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. நான் ஏற்கனவே மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று நுணுக்கங்களை வகுத்து வருகின்றேன்.ரோகித் சர்மா ஷர்துல் தாக்கூர் சூரியகுமார் போன்ற வீரர்களுடன் நான் பணியாற்றி இருக்கிறேன். உலக கோப்பை போன்ற தொடரில் தான் நியூசிலாந்து உடன் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.