அடப்பாவமே! முன்னணி வீரர்கள் யாருமின்றி பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து.. இந்த அவமானம் தேவையா?

0
804

ஐபிஎல் தொடரில் நியூசிலாந்தின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது இளம் வீரர்களை வைத்துக்கொண்டு அந்த அணி பாகிஸ்தானுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் போது, ஏதேனும் ஒரு சர்வதேச போட்டிகளை நடத்தி குடைச்சல் கொடுக்க பார்ப்பார்கள். அந்த வகையில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் நான்கு போட்டிகள் முடிவில் பாகிஸ்தான அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஐந்தாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் பாபர் அசாம் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். முகமது ஹாரிஸ் சலீம் அயூப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆக பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது. எனினும் அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 62 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இப்திகார் 22 பந்துகளில் 36 ரன்கள் சேர்க்க இறுதியில் இமான் வஸ்ஸிம் 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் லாத்தம் டக் அவுட் ஆக, வில் யங் நாலு நாட்களில் வெளியேறினார். பவுஸ் 19 ரன்களிலும், டேரல் மிச்செல் 15 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுக்க நியூசிலாந்த அணி 9.5 ஓவரில் 73 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதன் அடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியான நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் நீசம் மற்றும் சாம்பல் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர் நீசம் 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்க்க சிறப்பாக விளையாடிய மார்க் சாப்மேன் 57 பந்துகளில் 104 ரன்கள் விளாசினர்.

இதில் நான்கு சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் நியூசிலாந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்த அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது. நான்காவது டி20 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.