திடீரென ஓய்வை அறிவித்த நியூசிலாந்து நட்சத்திர வீரர்.. கண்ணீர் மல்க பேட்டி.. அணியில் இடம் தந்தும் ஆச்சரிய முடிவு

0
521
Wagner

தற்பொழுது நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி அதை முழுமையாக வென்று இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வியாழன் அன்று தொடங்க இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் 37 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் பெயரும் இடம் பெற்று இருந்தது. ஆனால் திடீரென அவர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மேலும் நியூசிலாந்து தேர்வுக்குழு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவித்திருக்கிறது.

37 வயதான நீல் வாக்னர் 10 ஆப்ரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்நாட்டு அணிக்கு விளையாட ஆரம்பித்து, 2012 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ரன்கள் தந்து 7 விக்கெட் கைப்பற்றியது இவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்டுகளுக்கு மேல் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில், ரிச்சர்ட் ஹாட்லிக்கு பிறகு இவருடைய ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இவர் கைப்பற்றி இருந்தார்.

திடீர் ஓய்வு குறித்து கண்ணீர் மல்க அழுதபடியே பேசிய நீல் வாக்னர் “இது ஒரு உணர்ச்சிகரமான வாரம். நீங்கள் அதிகம் கொடுத்த மற்றும் பெற்ற ஒன்றிலிருந்து விலகிச் செல்வது என்பது எளிதான காரியம் கிடையாது. ஆனால் மற்றவர்கள் இந்த அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதற்கான காலம் இது.

இதையும் படிங்க : 312ரன்.. ரைட் ஹேண்ட் ரெய்னா.. சிஎஸ்கே-வின் 20 வயது இளம் வீரர்.. 8.40 கோடி தப்பே இல்ல

இது ஒருபோதும் எளிதானது அல்ல. இது ஒரு உணர்ச்சிகரமான சாலை போன்றது. இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றது. நான் அணிந்த கருப்பு தோப்பியை ஒரு நல்ல இடத்தில் விட்டுவிட்டு, அதை வேறு யாராவது எடுத்துச் செல்வதற்கான காலமாக இது இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.