தற்பொழுது 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிகே நாயுடு டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் உத்தரபிரதேச அணியும் சௌராஷ்டிரா அணியும் உத்திர பிரதேச கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக, நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட அன் கேப்டு வீரர் 20 வயதான சமீர் ரிஸ்வி விளையாடுகிறார்.
நேற்று முன்தினம் பேட்டிங் செய்த சமீர் ரிஸ்வி 117 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் அதிரடியாக 134 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.
நேற்று தொடர்ந்து விளையாடிய அவர் தன்னுடைய அதிரடியை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே சென்று இரட்டை சதத்தை தாண்டி முச்சதம் அடித்து மிரட்டி இருக்கிறார்.
அவர் மொத்தமாக 266 பந்துகளை சந்தித்து 33 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் 312 ரன்கள் குவித்திருக்கிறார். இவர் இருக்கும் பார்முக்கு எடுத்ததுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை விளையாட வைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவர் உத்திரபிரதேசத்தில் தொடங்கப்பட்ட மாநில பிரான்சிஸைஸ் டி20 லீக்கில் கடந்த வருடத்தில் இரண்டு சதங்கள் அதிரடியாக அடித்திருந்தார். அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு விலை கொடுத்து ஒரு இளம் வீரரை வாங்கியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், இந்த இளம் வீரர் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பது, சிஎஸ்கே அணி நிர்வாகத்தை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : PSL.. 6 பந்தில் 4 விக்கெட்.. பாபர் அசாம் சதம்.. பெரிய சோக்.. பரிதாப தோல்வி
சுரேஷ் ரெய்னா போல இவரும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரேஷ் ரெய்னா எந்தெந்த பகுதிகளில் எப்படி விளையாடுவாரோ, அதேபோல இவர் வலது கையில் விளையாட கூடியவர். இவர் வலது கையில் விளையாடுவதை அப்படியே திருப்பி பார்த்தால் சுரேஷ் ரெய்னா விளையாடுவது போலவே இருக்கும். எனவே இந்த இளம் வீரர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.