இந்திய கிரிக்கெட்

எங்க பிளான் அப்ரோச் இப்படிப்பட்டது தான்.. இன்னைக்கு நாங்க விட மாட்டோம் – இந்திய அணிக்கு பிலிப்ஸ் சவால்

இன்று இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவோம் என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் சரிவை முதன் முதலில் நியூசிலாந்து அடியை ஆரம்பித்து வைத்தது. மூன்று போட்டிகள் போட்ட டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் வைத்து வென்றது. இதைத்தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்று சாதிப்போம் என்று கிளன் பிலிப்ஸ் கூறியிருக்கிறார்.

இந்தியா கடினமான இடம்

இதுகுறித்து கிளன் பிலிப்ஸ் கூறும்பொழுது “வரலாற்றை உருவாக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவானவை, ஆனால் அவை அருமையானவை. அதே சமயத்தில் நாம் அதில் கவனம் செலுத்துவது எதற்கும் உதவாது. நாம் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராக, ஒவ்வொரு தருணத்தையும் மற்ற நாட்களைப் போலவே அணுகி விளையாட வேண்டும்”

“உண்மையில் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம். ஏனென்றால் இந்திய அணி மிகவும் அபாரமான அணி. இங்கு வெள்ளைப் பந்து தொடர்களில் வெல்வது முற்றிலும் வேறான விஷயம். ஒரு சில அணிகளே இங்கு வெள்ளைப்பந்து தொடர்களை இந்திய அணிக்கு எதிராக வென்று இருக்கின்றன”

- Advertisement -

எங்கள் நோக்கம் இதுதான்

“எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அடி எடுத்து வைப்பது, எங்கள் கால்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் நிலையாக இருப்பது, நாம் களத்திற்குள் வரும் ஒவ்வொரு முறையும் நம்முடைய சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவது. எங்களுடைய அணுகுமுறை இப்படியானதுதான்”

இதையும் படிங்க: என் அப்பா கிட்ட தினமும் கதறி அழுத இருக்கேன்.. விராட் ரோஹித் கூட போட்டி இருக்கு – ஹர்ஷித் ராணா பேச்சு

“இந்த இந்தூர் மைதானம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த மைதானம் எப்பொழுதும் அதிக ரன்கள் எடுக்கும் போட்டிகளைக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மைதானமும் வித்தியாசமானவை. போட்டி நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக மைதானம் எப்படி இருக்கும் என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனமானது. அந்தந்த நாளில்தான் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by