என் அப்பா கிட்ட தினமும் கதறி அழுத இருக்கேன்.. விராட் ரோஹித் கூட போட்டி இருக்கு – ஹர்ஷித் ராணா பேச்சு

0
33
Rana

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்காக தன் தந்தையிடம் தினமும் அழுதுள்ளதாக ஹர்ஷித் ராணா கூறியிருக்கிறார். மேலும் வலையில் தான் யாருக்கு பந்து வீச விரும்புகிறேன் என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

தற்போது மூன்று வடிவ இந்திய அணிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக ஹர்ஷித் ராணா உருவாகி வருகிறார். காரணம் அவர் பேட்டிங் வரிசையில் கீழே ஓரளவுக்கு ரன்கள் எடுக்கக்கூடிய அளவுக்கு இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கிறது.

- Advertisement -

பவுலிங் ஆல் ரவுண்டர் தேவை

தற்போது இந்திய அணிக்கு பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் போல பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதன் மூலம் கீழ் வரிசையில் பேட்டிங்கை பலப்படுத்தலாம். மேலும் இவர்கள் பந்துவீச்சாளர்களாக இருப்பதால் பவுலிங் யூனிட்டும் பலமானதாக இருக்கும்.

இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ஆனால் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் என்று யாரும் இல்லை. எனவே தான் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகள் கொடுத்து அவரை சிறப்பான முறையில் உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அவரும் தன் பேட்டிங் மூலம் இந்திய அணியை நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெல்ல வைத்திருந்தார்.

- Advertisement -

தினமும் அழுதிருக்கிறேன்

இதுகுறித்து ஹர்ஷித் ராணா கூறும்பொழுது ” தோல்விகளை எப்படி கையாள்வது என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் என் கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த வெற்றியும் பார்க்காத 10 வருடங்கள் இருந்திருக்கின்றன. அப்பொழுது நான் செலக்ஷன்க்கு செல்வேன் தேர்வாகாமல் மீண்டும் திரும்பி வருவேன். அந்த காலகட்டத்தில் நான் என் தந்தையிடம் தினம்தோறும் அழுது இருக்கிறேன். அந்த நேரத்தில் என் தந்தை எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பவர் ஆக இருந்தார். அங்கு கிடைத்த அனுபவத்தில் நான் தோல்விகளை கையாள கற்றுக் கொண்டேன்”

இதையும் படிங்க: விராட் கோலிகிட்ட ஸ்மித் அப்பாவே அந்த வேலையை செய்யணும்.. பாபரால் அவமானம் இல்லை – பசித் அலி பேட்டி

“இந்திய அணியின் வலை பயிற்சியில் நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பந்து வீச விரும்புகிறேன். நான் ஓரளவுக்கு அவர்களுக்கு சுலபமாக பந்து வீசினாலும் கூட அவர்கள் என்னிடம் போட்டி தன்மையுடன் பேட்டிங் செய்கிறார்கள். எனவே நானும் அவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -