இந்திய அணி தங்களுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விதத்தில் பெருமைப்பட மாட்டார்கள் என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மகாராஷ்டிரா புனே மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் சில முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடி
இந்திய அணி கடந்த நான்காயிரம் நாட்களுக்கு மேலாக உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழக்காமல் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாளை துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக தோற்றால் இந்த மாபெரும் ஓட்டத்திற்கு முடிவு வந்துவிடும்.
மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு திடீர் போட்டியாக உருவெடுத்திருக்கிறது. இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் உள்நாட்டில் வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கொஞ்சம் வசதியாக அமையும்.
இந்திய அணி பெருமைப்படாது
இது குறித்து பேசி இருக்கும் டாம் லாதம் கூறும் பொழுது “இந்திய அணி முழுதாக தங்களின் செல்லுக்குள் சென்று விட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இங்கிலாந்து அணி விளையாடுகின்ற பாஸ்பால் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை எல்லோரிடமும் தாக்கம் செலுத்தி இருப்பது போல இவர்களிடமும் தாக்கம் செலுத்தி இருக்கிறது. நிச்சயமாக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட விதத்தில் பெருமை கொள்ள மாட்டார்கள். அவர்கள் சில லூஸ் ஷாட் விளையாடினார்கள்”
இதையும் படிங்க : 344 ரன்.. சிக்கந்தர் ராஸா 15 சிக்ஸ்.. டி20 வரலாற்றில் ஜிம்பாப்வே புதிய உச்ச சாதனை.. சிக்கிய புதிய அணி
“நாங்கள் எது செய்தாலும் அது சூழ்நிலைக்கு தகுந்தது போல் விரைவாக எங்களை மாற்றிக் கொள்வதாகவே இருக்கும். ஒருவேளை ஆடுகளம் சுழல் பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்றால், எங்களுடைய பிளேயிங் லெவனில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள். நாங்கள் எந்தவிதமும் யோசனை உடனும் செல்ல மாட்டோம். முதல் டெஸ்ட் போட்டிக்கு சூழ்நிலை தகுந்தது போல் செயல்படும். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் அப்படியே செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்.