ஜிம்பாப்வே அணி காம்பியா என்ற கிரிக்கெட்டுக்கு புதிய நாடான ஒரு அணிக்கு எதிராக இன்று டி20 கிரிக்கெட்டில் புதிய உச்ச சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறது.
தற்போது ஜிம்பாப்வே அணி காம்பியா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியும், அந்த அணியின் பேட்ஸ்மேன் சிக்கந்தர் ராஸாவும் புதிய உலகச் சாதனை படைத்திருக்கிறார்கள்.
ஜிம்பாப்வே அதிரடி பேட்டிங்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரையன் பென்னெட் 26 பந்தில் 50 ரன்கள், மருதாணி 19 பந்தில் 62 ரன்கள், அடுத்து வந்த டியான் மேயர்ஸ் 5 பந்தில் 12 ரன்கள், ரியான் பர்ல் 11 பந்தில் 25 ரன்கள், கிளீவ் மடன்டே ஆட்டம் இழக்காமல் 17 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் ஒருமுனையில் நிலைத்து நின்று இறுதிவரை விளையாடிய நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராஸா வெறும் 33 பந்துகளை சந்தித்து சதம் அடித்து அசத்தினார். இறுதியாக அவர் 43 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 133 ரன்கள் விளாசி மிரட்டினார்.
ஜிம்பாபேவும் சிக்கந்தர் ராஸாவும்
இதைத்தொடர்ந்து 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 344 குவித்தது. இதன் மூலம் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்த அணி என்கின்ற உலகச் சாதனையை படைத்தது. இதற்கு முன்பாக மங்கோலிய அணிக்கு எதிராக நேபாள் அணி 314 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக இருந்தது.
இதையும் படிங்க : கம்பீர் பாய் கண்ணில் பட கூடாதுனு இருந்தேன்.. ஆனா அவர் அப்படி செஞ்சத பார்த்தப்போ சந்தோசமா இருந்துச்சு – சாம்சன் பேட்டி
இதற்கு அடுத்து சிக்கந்தர் ராசா 33 பந்தில் சதம் அடித்ததின் மூலமாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்தப் பட்டியலில் எஸ்டோனியா நாட்டுக்காக விளையாடும் சாகில் சவுகான் சைப்ரஸ் அணிக்கு எதிராக 27 பந்தில் சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.






