28 பந்துகள் மீதம்.. முன்னாள் இந்நாள் சிஎஸ்கே வீரர்கள் அபாரம்.. முத்தரப்பு ODI.. பாக் அணியை வீழ்த்தி நியூசி சாம்பியன்

0
742

பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

முத்தரப்புத் தொடர் இறுதிப் போட்டி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தானில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடிய நிலையில் இதில் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பகார் ஜமான் 10 ரன்கள் மற்றும் பாபர் அசாம் 29 ரன்னில் வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஷகீல் 8 ரன்னில் நடையை கட்டினார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியின் ரன்களை உயர்த்தினார்கள். இதில் ரிஸ்வான் 46 ரன் குவித்து வெளியேற சல்மான் 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் தையப் தாகிர் 38 ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 49. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் பந்துவீச்சில் வில்லியம் ரூர்கி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி சாம்பியன்

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி இறங்கியது. வில் யங் ஐந்து ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் சிஎஸ்கே தொடக்க வீரர் காண்வே 48 ரன்கள் குவித்தார். இதில் வில்லியம்சன் மற்றும் கான்வெ ஜோடி 71 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 34 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் அபாரமாக விளையாடி டாரி மிச்சல் 57 ரன்கள் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லதாம் 56 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க:மனுஷன் எப்படி கணிச்சார்னு தெரியல.. தோனி சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு – அஸ்வின் ஆச்சரியம்

45.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 28 பந்துகள் மீதும் வைத்து நியூசிலாந்து அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் பாகிஸ்தான் அணித்தரப்பில் நசிம்ஸா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் நியூசிலாந்து அணிக்கு இது சிறந்த பயிற்சி போட்டியாக அமைந்திருக்கிறது. மேலும் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதால் அடுத்த தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -