சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி வெறும் ஐந்து ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இறுதி போட்டியில் தோனி சொன்ன வார்த்தைகள் குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் திரில் வெற்றி
2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்டே விளையாடியது. ஷேவாக், கம்பீர், சச்சின், யுவராஜ் என அனைத்து முன்னணி வீரர்களும் விலக சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, தவான், விராட் கோலி, ரோஹித் சர்மா என அப்போது இளம் வீரர்களாக திகழ்ந்தவர்களை மட்டுமே தோனி அந்தத் தொடரில் எடுத்து விளையாடினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு அணி இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில் இங்கிலாந்து அணியை எதிர்த்து கடைசி போட்டியை விளையாடியது.
இதில் 20 ஓவர்கள் முடிவில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்து 5ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர்களான தினேஷ் கார்த்திக் இறுதிப் போட்டியில் செயல்பட்ட விதம் குறித்தும், ரவிச்சந்திரன் அஸ்வின் தான் பந்து வீசும் போது தோனி கூறிய வார்த்தைகள் குறித்தும் நினைவுகளை கூறியிருக்கிறார்கள்.
இன்னும் நம்ப முடியல
இதுகுறித்து முதலில் தினேஷ் கார்த்திக் கூறும் போது ” இந்திய கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் என்றால் என்ன என்பதை காட்ட எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. நாங்கள் அப்போது உறுதியோடு இருந்தோம் எதிர்த்துப் போராடினோம், எந்த சூழ்நிலையிலும் போட்டியை கைவிடாத மனநிலையில் இருந்தோம். இங்கிலாந்து அணி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட இலக்கை அடைந்தார்கள். ஆனால் தோனி அப்போது அற்புதமாக செயல்பட்டார். அவருக்கு பந்துவீச்சாளர்கள் ஆதரவளித்தனர்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:என்னதான் கலாய்ச்சாலும்.. விராட் கோலியை முந்தி சாதனை படைத்த பாபர் அசாம்.. ஒரு நாள் தொடரில் மாஸ் ரெக்கார்டு
இதுகுறித்து அஸ்வின் கூறும் போது ” மகிபாய் அப்போது என்னிடம் வந்து நீ டிராட்டுக்கு ஸ்டம்புகளுக்கு மேல் பந்து வீசாதே. மாறாக விக்கட்டை சுற்றி வந்து பந்து வீசு. அவன் லெக்சைட்டில் விளையாட முயற்சிப்பான். அப்போது பந்து சுழன்று ஸ்டம்பிங் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவர் அதை எப்படி கணித்தார் என்று என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை” டிராட் அதே முறையிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார் என கூறி இருக்கிறார்.