மகளிர் பிரீமியர் லீக்கில் புதிய விதி.. அவுட்டுக்கும் மட்டும் டிஆர்எஸ் கிடையாது.. இதுக்கும் பயன்படுத்தலாம்!

0
1845

மகளிர் பிரீமியர் லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 207 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 30 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க குஜராத் அணி 64 ரன்களில் சுருண்டு 143 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.

மும்பை வீராங்கனை சாய்கா வீசிய பந்தை குஜராத் பேட்டர் மோனிகா அடிக்கும் போது அது பேட்டில் பட்டது. எனினும் நடுவர் இதற்கு WIDE வழங்கினார். இதை பார்த்ததும் களத்தில் இருந்த அனைத்து வீராங்கனைகளும் சிரித்தார்கள்.
அதன் பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் திடீரென டிஆர்எஸ் முடிவை கேட்டார்.

இதனை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எப்போதும் ஒரு வீரர் அவுட்டா இல்லையா என்பதை பார்க்கத்தான் டிஆர்எஸ் முடிவை அணி பயன்படுத்தும். ஆனால் ஹர்மன்பிரீத் ஓய்டு முடிவு மறுபரீசிலினை செய்ய டி ஆர் எஸ் பயன்படுத்தினார். இதனை நடுவரும் ஏற்றுக்கொண்டு மூன்றாம் நடுவர் ரீப்ளேவில் பார்க்க அது ஓயுடு இல்லை என தெரிய வந்தது.

- Advertisement -

இதை அடுத்து நடுவர் தனது முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் தொடரில் புதியதாக இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விதி 3.1.1 படி நடுவர் கொடுக்கும் ஓயிடு மற்றும் நோ பாலை முடிவை எதிர்த்து வீரர்கள் டிஆர்எஸ் முடிவை பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூன்றாம் நடுவர் நடுவர் செய்தது சரிதான் என்று சொன்னால் அணியிடம் இருக்கும் அந்த டிஆர்எஸ் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஏனென்றால் நடுவர்கள் நோபால் அல்லது ஒயிட் கொடுத்தும் கொடுக்காமலும் போவதால் பல ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை சரி செய்ய டிஆர்எஸ்ஐ பயன்படுத்தலாம் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.