இந்தியாவை யாரும் தோற்கடிக்க முடியாது.. உலக கோப்பை சாம்பியன் அவங்க தான்.. நெதர்லாந்து நட்சத்திர வீரர் பேட்டி.!

0
2204

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிச் சுற்றும் மூலம் இடம்பெற்ற அணிகளில் ஒன்று நெதர்லாந்து. இந்த அணி கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் தகுதி சுற்றும் மூலம் இடம் பெற்றாலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற அணிகளை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பிற்கு உள்ளாகியது.

தற்போது நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட நெதர்லாந்து தென்னாபிரிக்க அணியுடன் போட்டியில் அந்த அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் பங்களாதேஷ் அணியையும் வீழ்த்தி இரண்டு வெற்றிகளுடன் அப்போது புள்ளிகள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியாவை பெங்களூரில் வைத்து எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியின் பல வீரர்கள் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். அவர்களில் பஸ் டி லீட், ஆக்கர்மேன்,ஏங்கள்பிரக்ட், ஆரியன் தத்,வான் பீக், விக்ரம் ஜித் சிங் மற்றும் கேப்டன் எட்வார்ட்ஸ் ஆகியோர் முக்கியமான வீரர்கள் அவர். இவர்கள் இந்த உலகக்கோப்பையில் பல போட்டிகளிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இவர்களில் நெதர்லாந்து அணியின் துவக்க வீரராக களம் இறங்குபவர் 20 வயது இளம் வீரரான விக்ரம்ஜித் சிங். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இவர் ஒரு அரை சதம் எடுத்து இருக்கிறார். ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் திருப்பியவர். பன்னிரண்டாம் தேதி நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்த போது இந்த வருட உலகக் கோப்பையை கைப்பற்றும் அணி மற்றும் ஐபிஎல் தனக்கு பிடித்தமான அணி பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இந்த வருட உலகக் கோப்பையை நிச்சயமாக இந்தியா தான் கைப்பற்றும். இந்தியாவை தாண்டி வேறு எந்த அணியையும் யோசிக்க முடியாது . இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்களை எந்த அணியாலும் வீழ்த்த முடியாது. அதனால் இந்தியா தான் இந்த வருட உலகக் கோப்பையை கைப்பற்றும் என்பது என்னுடைய கருத்து” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் போட்டிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” நாங்கள் நெதர்லாந்து நாட்டில் கிரிக்கெட் போட்டியை எவ்வாறு மேம்படுத்துவது நெதர்லாந்து அணியை உலகின் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணியாக இவ்வாறு உருவாக்குவது என யோசித்துக் கொண்டிருக்கிறோம் . எனினும் ஐபிஎல் என்பது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக். அதில் விளையாட வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். எனக்கும் அந்த கனவு இருக்கிறது.

“ஐபிஎல் போட்டிகளில் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும். நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவதையே மிகவும் விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார். நெதர்லாந்து அணி துவக்கத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்த பிறகு தென்னாப்பிரிக்கா அணியை வென்று ஆச்சரியப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த அணி ஆஸ்திரேலியா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் பெற்ற தோல்வியால் தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.