6 பந்துக்கு 3 ரன்கள் தேவை.. சொதப்பிய இந்திய அணி… டை ஆன பங்களாதேஷ்க்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி.!

0
1094

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மட்டும் டி20 தொடர்களில் விளையாடி வந்தது இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் 16-ஆம் தேதி துவங்கியது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 225 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் துவக்க வீரரான பர்கானாக சிறப்பாக விளையாடி ஹக் சிறப்பாக விளையாடி 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் சுல்தானா 52 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்லின் தியோன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் எடுத்தனர். மூன்றாவது விக்கெட் இருக்கு ஜோடியாக இவர்கள் இருவரும் இணைந்து 107 ரன்கள் எடுத்த நிலையில் 59 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனா ஆட்டம் இழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடுவரின் தவறான தீர்ப்பால் 14 ரண்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த நிலைவரை இந்திய அணி 34 ஓவர்களில் 160 ரன்கள் விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெறுவதற்கு வலுவான நிலையிலேயே இருந்தது. ஆனால் ஹர்லின் தியோல் 77 ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு அவருக்குப் பின் வந்த எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஒரு முனையில் ஜெமிமா ரோடிகுரூஸ் மட்டும் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஜெமிமா மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றி இலக்கை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தார். இறுதி மூன்று ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து போட்டியை பங்களாதேஷ் அணியின் பக்கம் செல்ல அனுமதித்தது.

- Advertisement -

இறுதியாக ஒரு ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது இந்தியா ஆனால் இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் பங்களாதேஷ் அணியின் மரூஃபா அத்தர் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் மேக்னா சிங் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பரபரப்பான போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியை டிராவில் முடித்தது. சிறப்பாக ஆடிய ஜெமிமா ரோடிகுரூஸ் 33 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார் . பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் நகிதா அக்தர் 3 விக்கெட்டுகளையும் மரூஃபா அத்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த ஒரு நாள் போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி டி/எல் முறைப்படி 40 ரன்கள் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது. இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி டிராவில் முடிவடைந்ததால் இந்த ஒரு நாள் போட்டி தொடரும் சமணில் முடிவடைந்தது. கோப்பையை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பகிர்ந்து கொண்டன.