சச்சின் கிடையாது.. இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலிதான் கிரேட்.. காரணத்தை பாருங்க – நவ்ஜோத் சிங் சித்து கருத்து

0
148
Virat

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க காலத்தில் கிரிக்கெட் வர்ணனைக்காக மிகவும் புகழ்பெற்றவராக முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார். அவருடைய நகைச்சுவை கலந்த பேச்சு மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் காரணமாக பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்று அங்கிருந்து அரசியலுக்கும் சென்று விட்டார். தற்பொழுது அவர் எல்லாவற்றையும் விட்டு கிரிக்கெட் வர்ணனைக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று விராட் கோலி தொடர்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அதில் விராட் கோலி மூன்றாம் இடத்தில் ஆர்சிபி அணிக்கு விளையாட வேண்டும் என பலரும் வாதிட்டார்கள். இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் அவர் மூன்றாவது இடத்தில் விளையாடினால், ஆர் சி பி அணியும் அப்படியே விளையாடலாம் என்பது அவர்களது வாதமாக இருந்தது.

- Advertisement -

ஆனால் நவ்ஜோத் சிங் சித்துவின் கருத்து வேறாக இருந்தது. அவர் துவக்க வீரராக விளையாடலாம் என்று வாதிட்டதோடு, மேற்கொண்டு விராட் கோலி இந்திய பேட்ஸ்மேன்களில் எல்லோரையும் விட சிறந்தவர் என்கின்ற ஒரு புதிய கருத்தைக் கூறி அதற்கு ஒரு விவாதத்தையும் உருவாக்கி விட்டார்.

இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலிதான் சிறந்தவர்

இது குறித்து நவ்ஜோத் சிங் சிந்து கூறும் பொழுது ” நான் அவர் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. உலகம் எப்பொழுதும் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். நீங்கள் தலைசிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் உங்களிடம் கோப்பை இல்லை என்றால் அது ஒரு கறையாக அமையும். எனவே அதை நீங்கள் துடைப்பதற்கு முயற்சி செய்வீர்கள். அவருக்கு துவக்க இடம் மோசமானதாக இருந்ததில்லை. அவர் அங்கு தன்னுடைய சிறந்ததை கொடுத்திருக்கிறார்.

நான் விராட் கோலியை எப்பொழுதும் இந்திய பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் என்று கூறுவேன். 1970 மற்றும் 80களில் ட்ரான்சிஸ்டர் வைத்து கவாஸ்கர் அவர்கள் ஹெல்மெட் இல்லாமல், மிகச்சிறந்த வெஸ்ட் இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியதை தொடர்ந்து பத்து பதினைந்து ஆண்டுகள் கேட்டு வந்தேன்.

- Advertisement -

இதற்கு அடுத்து சச்சின் டெண்டுல்கர் வந்தார். அடுத்து மகேந்திர சிங் தோனி வந்தார். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி வந்தார். ஆனால் இவர்களில் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். காரணம் என்னவென்றால் விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் சேர்ந்தார் போல் தன்னை மிகச் சுலபமாக தகவல் வைத்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. ஆர்சிபி-க்கு எதிரா உத்தேச சிஎஸ்கே வலிமையான ப்ளேயிங் XI.. சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு

பொதுவாக பேட்டிங் தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் மேல் உள்ள எல்லோரும் ஒரே வரிசையில் வரலாம். ஆனால் உடல் தகுதி என்று எடுத்துக் கொள்ளும் பொழுது எல்லோரும் ஒரே வரிசையில் வர மாட்டார்கள். இந்த இடத்தில் தான் விராட் கோலி யாரையும் விட மிகச் சிறந்தவராக இருக்கிறார். அவரை எல்லோரையும் விட சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்கின்ற நிலைக்கு உயர்த்த இதுதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.