ஐபிஎல் 2024.. ஆர்சிபி-க்கு எதிரா உத்தேச சிஎஸ்கே வலிமையான ப்ளேயிங் XI.. சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு

0
539
CSK

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி என எதிரெதிர் அணிகளில் இருந்து விளையாடுகின்ற காரணத்தினால், போட்டி குறித்தான எதிர்பார்ப்பு இந்தியா முழுமைக்குமே எக்கச்சக்கமாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் கான்வே ஐபிஎல் தொடரின் கடைசிக் கட்டத்தில்தான் கிடைப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கையின் மதிஷா பதிரனா காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிய வருகிறது. மேலும் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த பங்களாதேஷ் தேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் காயம் சரியாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் இணைந்து இருப்பது நல்ல விஷயம்.

- Advertisement -

சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன்

நியூசிலாந்தைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் கான்வே இல்லாத நிலையில், நியூசிலாந்தின் இளம் துவக்க ஆட்டக்காரர் இடது கை பேட்ஸ்மேன் சச்சின் ரவீந்திரநாத் துவக்க இடத்தில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. தொடரின் ஆரம்பம் என்பதால் ரகானேவுக்கு முதலில் வாய்ப்புகள் கொடுக்கப்படும். பிறகுதான் அவருடைய இடத்துக்கு இளம் வீரர் சமீர் ரிஸ்வி கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தோனி எப்பொழுதுமே இதே வழிமுறையில்தான் சென்றிருக்கிறார்.

மேலும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் சிவம் துபே மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்சல் விளையாடுவார்கள். ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி இருப்பார்கள்.

எட்டாவது, ஒன்பதாவது இடங்களில் சர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சகர் இடம் பெறுவார்கள். 10 மற்றும் 11 வது இடத்தில் மதிஷா தீக்சனா மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த முறையும் நியூசிலாந்தை சேர்ந்த இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மிட்சல் சான்ட்னர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும் ரச்சின் ரவீந்தரா இடதுகை சுழற்பந்து பகுதி நேரமாக விசுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா உடன் சேர்த்து மொத்தம் ஐந்து பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ரச்சின் ரவீந்தரா பகுதி நேரமாக பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரோடு ஆறு பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள். சென்னை மைதானத்திற்கு 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சுழல் பந்துவீச்சாளர்கள் போதும் என்று தோனி நினைத்தால், இம்பேக்ட் பிளேயர் இடத்தில் இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி வருவார். இல்லை கூடுதலாக பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் முகேஷ் சௌத்ரி விளையாடலாம்.

இதையும் படிங்க : பும்ரா டி20 உலககோப்பை விளையாடனுமா?.. அப்ப உடனே இதை செய்யுங்க – மெக்ராத் எச்சரிக்கை

ஐபிஎல் முதல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச பிளேயிங் லெவன் :

ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரகானே, சிவம் துபே, டேரில் மிட்சல், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ்.தோனி, சர்துல் தாக்கூர், தீபக் சகர், மதிஷா தீக்சனா மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மான். இம்பேக்ட் பிளேயராக சமீர் ரிஸ்வி இல்லை முகேஷ் சௌத்ரி இடம் பெறலாம்.