இந்தியாவின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.. பிசிசிஐ அதுக்கு தான் இப்படி பண்ணி இருக்காங்க – சித்து அதிரடி பேட்டி

0
761

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலக கோப்பையில் பங்கேற்க இந்திய அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக டி20 உலக கோப்பையில் அணியை வழி நடத்துவார் என்று ஜெய்ஷா முன்னரே அறிவித்திருந்தார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு பிறகு அனைத்து நாடுகளும் பங்குபெறும் டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தீவிர உழைப்பு காட்டி வருகிறது. இந்த ஐபிஎல்லில் நன்றாக செயல்படும் வீரர்களை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதால் அனைத்து இளம் வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடிய வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ரோகித் சர்மா ஏறக்குறைய டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 36 வயதாகி வருவதால் அவரின் வயது காரணமாக இந்த முடிவை எடுக்கலாம்.

இதனால் ரோஹித் சர்மாவுக்கு பிறகு டி20 மற்றும் ஒரு நாள் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பதவி ஏற்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நவ்ஜோத் சித்து கூறி இருக்கிறார். இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு அவர்தான் அடுத்த எதிர்காலம் என்றும் கூறியிருக்கிறார். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பும்ரா சிறந்த கேப்டனாக இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த எதிர்காலம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் அடுத்த எதிர்காலம். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் அவர் ஓய்வு பெறலாம். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அற்புதமான ஒரு வீரர். என்னை கேட்டால் அவர் ஒரு கவிதையை போன்றவர் என்று சொல்வேன். நான் அவரை பார்க்கும் போதெல்லாம் நேரம் நின்று விடுவது போல் தோன்றும். ஆனால் கிரிக்கெட்டை யாரோ ஒருவர் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

நான் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர்தான் உங்கள் துணை கேப்டன். ரோகித் சர்மா இல்லாத ஒரு வருடத்தில் அவர்தான் டி20 இந்திய அணியை வழி நடத்தினார். ஹர்திக் பாண்டியாதான் வெள்ளைப் பந்து கேப்டன் பதவிக்கு இயல்பான தீர்வாக இருப்பார். அதனால்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை துணை கேப்டனாக நிர்ணயித்துள்ளது. பிசிசிஐ இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிறைய ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை வைத்திருக்கும்.

இதையும் படிங்க: தோனிகிட்ட சச்சினுக்கும் நடந்துச்சு.. ஏன் அசிங்கமா நடந்துகிட்டு நடிக்கிறிங்க – அஸ்வின் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு திட்டத்தை முன்கூட்டியே வகுத்துள்ளது. பும்ரா அவர் மற்றொரு பிரபலம் அடையாத ஒரு ஹீரோ. விராட் கோலி, தோனி பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் பும்ரா எதிர்பார்ப்புகளை அற்புதமாக கையாண்டு உள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்து அவர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார் என்று பாருங்கள். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனுக்கான இயல்பான தேர்வாக இருந்தார். ஆனால் பும்ராவே டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம் அவர் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் பதவிக்கு தகுதியானவரும் அவரே” என்று கூறி இருக்கிறார்.