“நவீன் ஐபிஎல் விளையாடறதே பெரிய விஷயம்.. அவர முதல்ல ட்ரோல் பண்ணதே தப்பு!” – கம்பீர் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
939
Gambhir

நேற்று உலகக்கோப்பை தொடரில், தொடரை நடத்தும் இந்திய அணி டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது.

நேற்று வார விடுமுறை நாள் இல்லை என்றாலும், சொந்த நாட்டு அணி விளையாடுகின்ற காரணத்தினால், போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்ததோடு, மைதானத்திற்கும் அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தார்கள்.

- Advertisement -

வந்திருந்த ரசிகர்களுக்கு எந்தவித குறையும் வைக்காமல் இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் விருந்து வைத்தது. பந்து வீச்சில் பும்ரா கலக்கலான செயல்பாட்டை காட்ட, பேட்டிங்கில் ரோஹித் சர்மா நொறுக்கி தள்ளிவிட்டார்.

இன்று சமூக வலைதளங்களில் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிகம் பேசப்பட்டு இருக்க வேண்டிய நேரத்தில், வேறு இரண்டு வீரர்கள் சமூக வலைதளத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக். கடந்த ஐபிஎல் தொடரில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை முதல் காரணமாக மைதானத்தில் பிரச்சனை வெடித்தது. இதில் லக்னோ வழிக்காக மென்டராக இருக்கும் கம்பீரும் களத்தில் குதிக்க களம் சூடு பிடித்தது. அந்த சமயத்தில் இந்த பிரச்சனை சில வாரங்களுக்கு நீடித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து நேற்றைய போட்டியில் இருவரும் மைதானத்தில் கைகுலுக்கி, தங்களுடைய பிரச்சனையை தீர்த்துக் கொண்டார்கள். மேலும் விராட் கோலி நவீனை ரசிகர்கள் கேலி செய்யக்கூடாது என்று மைதானத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினையில் மூன்றாவது நபராக பங்கெடுத்து இருந்த கம்பீர் இது குறித்து கூறும் பொழுது ” நீங்கள் களத்தில்தான் போராடுகிறீர்கள். களத்திற்கு வெளியே கிடையாது. ஒவ்வொரு வீரருக்கும் தனது அணிக்காகவும், மரியாதைக்காகவும் வெற்றி பெறவும் போராட உரிமை உண்டு.

நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர் நீங்கள் எவ்வளவு சிறந்த வீரர் என்பதெல்லாம் இதில் முக்கியமே கிடையாது. விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரையும் மைதானத்தில் பார்த்த பொழுது அவர்களுக்கு இடையே ஆன பிரச்சனை முடிவுக்கு வந்தது தெரிந்தது.

மைதானத்திலோ அல்லது சமூக வலைதளத்திலோ ஒரு வீரரை ரசிகர்கள் கேலி செய்யக்கூடாது என்று நான் கூட்டத்தினரையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது உணர்ச்சிவசப்படுவார். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து முதல்முறையாக ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் விளையாடுவது நவீனுக்கு மிகப்பெரிய விஷயம்!” என்று கூறி இருக்கிறார்!