இந்தியாவை விட்டே வந்த வீரர்..லண்டன் வந்து இறங்கியதும் இந்திய அணியில் இடம் .. 30 வயதில் அடிச்ச லக்

0
20909

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தான் நவதீப் ஷைனி. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு சிட்னியில் இந்திய அணி ஆஸ்திரேலியாக்கு எதிராக வெற்றி பெற்ற போது நவதீப் சைனி காயத்தின் பொருட்படுத்தாமல் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசினார்.

அதுதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாகும். அதன் பிறகு தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த நவதீப் சைனி, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது காயங்கள் குணமடைந்து மீண்டும் நவதீப் சைனி போட்டிகளில் விளையாடுகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட நவதீப் சைனி கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கவுன்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக நவதீப் சைனி லண்டன் வந்து இறங்கினார். 4 போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் கவுண்டி கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நவதீப் சைனியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இந்த செய்தி கேள்விப்பட்டதும் ஆச்சரியம் அடைந்த நவதீப் சைனி இதனை கொஞ்சமும் தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,” நான் லண்டன் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் தான் இந்த செய்தி எனக்கு கிடைத்தது. இந்த தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் நான் கொஞ்சமும் கூட எதிர்பார்க்கவில்லை. ஐபிஎல் தொடரில் இருந்தபோது நான் டியூக் பந்துகளை வைத்து பயிற்சி செய்தேன்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியின் கூடுதல் வீரராக நான் இடம் பெறுவேன் என்று எனக்குத் தெரியும். அதற்காக நாங்கள் தயாராக இருந்தோம். வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்பு ஒரு போட்டியில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அது எனக்கு நிச்சயம் நல்ல பயிற்சியாக அமையும்.

வேக பந்துவீச்சாளர்கள் எப்போதுமே அடிக்கடி அடையக் கூடியவர்கள் தான். ஆனால் எனக்கு ஒரு நல்ல விஷயம். இப்போது மீண்டும் மீண்டும் எனக்கு காயம் ஏற்படுவதில்லை. முன்பு எல்லாம் தொடர்ந்து காயம் ஏற்படுவதால் மிகவும் ஏமாற்றும் அடைவேன்.

தற்போது முழு குணமடைந்து பந்துவீச்சு பயிற்சி ஈடுபட்டு வருகின்றேன். காயம் அடைவது நமது கைகளில் இல்லை. நான் எப்போதுமே பந்துவீச்சில் தான் கவனம் செலுத்தி வருகின்றேன். இந்திய அணி நிர்வாகம் என் மீது எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறது.

இதனால் பலமுறை நான் அணியில் கூடுதல் வீரராக பயணம் செய்திருக்கிறேன். எப்போதுமே அணிக்கான தேர்வில் எனது பெயரும் பரிசீலினையில் இடம்பெறும். வெஸ்ட் இண்டீஸ்க்கு நான் செல்ல இருப்பது இரண்டாவது முறை.

முதல் முறை சென்ற போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியும் என நவதீப் சைனி கூறியுள்ளார். இந்தத் தொடரில் உமேஷ் யாதவ், முகமது சமி இடம் பெறாத நிலையில் முகேஷ் குமார், நவதீப் ஷைனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.