வீடியோ- திரும்ப வந்துட்டேனு சொல்லு..! யாக்கர்களை தெறிக்கவிட்ட நடராஜன்..! மிரண்ட டெல்லி

0
1692

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நான்கு ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் ஹைதராபாத் அணியிலிருந்து நடராஜன் நீக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

நடராஜன் போன்ற சாம்பியன் வீரர்கள் எப்போதெல்லாம் கீழே விழுகிறார்களோ, அப்போதெல்லாம் மீண்டு எழுந்து தங்களுடைய திறமையை நிரூபிப்பார்கள். நடராஜன் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தன்னுடைய அடையாளமான யாக்கர் பந்துகளை வீசி அசத்தினார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 198 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது நடராஜன் தான். ஹைதராபாத் அணியின் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லாம் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள்.

உம்ரான் மாலிக் ஒரே ஓவரில்  22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் நடராஜன் மட்டும் 4 ஓவர் வீசி 34 ரன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு விக்கெட்டும் அடங்கும். இன்னும் சொல்லப்போனால் நடராஜன் வீசிய 19வது ஓவரில் தான் போட்டியே ஹைதராபாத் அணிக்கு சாதகமாக மாறியது.

கடைசி இரண்டு ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19 வது ஓவர் வீசிய நடராஜன் யாக்கர் பந்துகளை தொடர்ந்து வீசி தெறிக்க விட்டார். தொடர்ந்து நான்கு யாக்கர்களை வீசியதால் டெல்லி அணியால் சிங்கிள்ஸ் ,தவிர வேறு எதுவும் ஓட முடியவில்லை. கடைசி பந்தில் மட்டும் எதிர்பாராதமாக பவுண்டரி சென்றது.

- Advertisement -

இதன் காரணமாக நடராஜன் வீசிய ஓவரில் வெறும் ஒன்பது ரன்கள் தான் சென்றது. இதன் காரணமாக கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட புவனேஸ்வர் குமார் அதனை வீசினார். இதில் டெல்லி அணி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் அடித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடராஜன் ஓவரில் மட்டும் 10 ரன்களுக்கு மேல் சென்று இருந்தால் டெல்லிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் நமது சேலத்து சிங்கம் நடராஜன் தனி ஆளாக ஆட்டத்தை மாற்றியது. இதன் மூலம் நடராஜன் மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நடராஜன் இதே போன்ற ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறலாம்.