“எனக்கு பெருமையே நீங்கதான்.. உங்ககிட்டதான் கத்துக்கறேன்” – நாதன் லயன் அஸ்வினுக்கு பாராட்டு

0
271
Ashwin

கிரிக்கெட் உலகத்தில் சம காலத்தில் திறமை வாய்ந்த மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆப் ஸ்பின்னர்ர்களாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள்.

இதில் நாதன் லயன் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 230 இன்னிங்ஸ் களில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

- Advertisement -

கிரிக்கெட் உலகில் 500ஆவது டெஸ்ட் விக்கட்டை பெற்ற இரண்டாவது ஆப் ஸ்பின்னர் ஆக நாதன் லயன் வந்தார். அவருக்கு முன்பாக இலங்கையின் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக 800 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார்.

இதற்கு அடுத்து இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 184 ஆவது இன்னிங்ஸில் 500 ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். மேலும் உலக அளவில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவதாக அதிவேகமாக 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியவராக சாதனை படைத்திருக்கிறார். மேலும் 500 வது விக்கெட்டை கைப்பற்றிய ஒன்பதாவது வீரராக பட்டியலில் உள்ளே நுழைந்து இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் நாதன் லயனுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எப்பொழுதும் நல்ல மரியாதை உண்டு. ஒருநாள் இரவு விருந்து நாம் அமர்ந்து பேச வேண்டும் என்று நட்பு ரீதியாக ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நாதன் லயன் கோரிக்கை வைத்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “ஹேய் அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு ஒரு பெரிய வாழ்த்து. இதுபார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு பயணம்.

இதையும் படிங்க : “அஷ்வின் இது என் உத்தரவு.. இதை நீங்க செஞ்சே ஆகனும்” – அனில் கும்ப்ளே பேச்சு

மேலும் நீங்கள் நடந்து கொண்ட விதத்திற்கும் உங்களுடைய திறமைக்கும் மரியாதை மட்டுமே செலுத்த முடியும். உங்களுக்கு எதிரான போட்டியாளராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களிடமிருந்து சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். உங்களுக்கு இந்த வழியில் இன்னும் நிறைய வரவிருக்கின்றன நண்பரே! வாழ்த்துக்கள்!” என்று கூறியிருக்கிறார்.