“அஷ்வின் இது என் உத்தரவு.. இதை நீங்க செஞ்சே ஆகனும்” – அனில் கும்ப்ளே பேச்சு

0
677
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 500 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றும் ஒன்பதாவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்திருக்கிறார். மேலும் மிக விரைவாக இந்த சாதனையை செய்தவர்கள் பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அளவில் ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே 619 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் 432 விக்கெட்டுகள் உடன் கபில் தேவ் இருக்க, தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

வேகமாக கிரிக்கெட் மாறி வருகின்ற சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ரசிகர்களின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. இதைக் காப்பாற்றுவதற்கு பெரிய அளவில் ஐசிசி முயற்சியும் செய்து வருகிறது.

அதே சமயத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தனிப்பட்ட பிரதான ஆப் ஸ்பின் பந்துச்சாளர்களுக்கு அணியில் இடம் இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த வகை பந்துவீச்சை பகுதிநேர பந்துவீச்சாளர்களாக பேட்ஸ்மேன்கள் வீசுகிறார்கள். மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள், மற்றும் தீட்சனா போன்ற மர்ம சுழற் பந்துவீச்சாளர்கள் போன்றவர்களுக்கு தான் வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

எனவே இந்த ஆப் ஸ்பின் பந்துவீச்சு கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது என்றுதான் கூற வேண்டும். தற்பொழுது ஆஸ்பின் பந்துவீச்சில் டெஸ்டில் 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்கின்ற சிறப்பும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : “என்சிஏ-வை வைத்து மோசடி நடக்குது.. உஷாரா இருங்க” – பிசிசிஐ வெளியிட்ட அதிரடி தகவல்

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அ ஸ்வின் குறித்து அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவிக்கையில் “அஸ்வின் வாழ்த்துக்கள். 500 விக்கெட் மற்றும் பலவற்றுக்காக உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது 625, 700 என்று போய்த்தான் முடிய வேண்டும். நீங்கள் அப்படித்தான் முடிக்க வேண்டும். உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும். அதற்கு கீழே எங்கும் நீங்கள் நினைக்க கூடாது” என்று கூறி இருக்கிறார்.