அந்த 3 பேரும் கீழ் வரிசை வீரர்களே கிடையாது.. இந்திய வீரர்களை பாராட்டிய லயான்

0
10270

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் யார் என்று கேட்டால் உங்களுக்கு ஷாக்காகி விடும். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் முதலிடத்தில் இருப்பார்கள் என்று ரசிகர்கள் தொடர் தொடங்குவதற்கு முன்பு எதிர்பார்த்த நிலையில் தற்போது அக்சர் பட்டேல் அந்த இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் இந்திய அணி தடுமாறும் போதெல்லாம் கீழ் வரிசை வீரர்கள் தான் அணியை காப்பாற்றுகிறார்கள். வங்கதேசத்தில் கூட அப்படிதான் நடந்தது. அவ்வளவு ஏன் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் கூட அக்சர் பட்டேல், ஜடேஜா ஜோடி தான் இந்திய அணியை காப்பாற்றியது. தற்போது டெல்லி டெஸ்ட் போட்டாலும் அதே கதை தொடர்கிறது .இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் பின் தங்கி தோல்வி அடையும் நேரத்தில் அக்சர்பட்டேல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த்து.

இந்திய அணியை 262 ரன்கள் என்ற கௌரவ ரன்கள் எட்ட அக்சர் ஆட்டம் உதவியது. இதன் மூலம் இந்தியா ஒரே ஒரு ரன் மட்டும் பின் தங்கியது. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் லயான்,  ஜடேஜா அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேலை வெகுவாக பாராட்டினார். தயவு செய்து இந்த மூன்று வீரர்களையும் கீழ் வரிசை வீரர்கள் என்று அழைக்காதீர்கள். அவர்கள் டாப் ஆர்டரில் எந்த இடத்தில் விளையாட சொன்னாலும் நன்றாக ரன் சேர்ப்பார்கள்.

என்னைக் கேட்டால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சொல்வேன். பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் விளையாடக்கூடிய வீரர்கள் ரன் சேர்க்கிறார்கள். இது எதிரணிக்கு நிச்சயம் தலைவலி கொடுக்கும் என நாதன் லயான்  பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த டெஸ்ட் போட்டி இன்னும் முடிவடையவில்லை. எங்களுடைய குறிக்கோள் எல்லாம் வெற்றியை நோக்கி தான் இருக்கிறது.

- Advertisement -

நாக்பூர் ஆடுகளத்தை ஒப்பிட்டு பார்த்தால் டெல்லியில் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கிறது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம் என லயான் கூறினார். லயானின் இந்த கருத்து குறித்து அக்சர் பட்டேலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அக்சபட்டேல் சிரித்தார். மேலும் பேசிய அவர் அப்படி (முன்வரிசை வீரர்கள்) சொல்லிவிட முடியாது. அனைத்தும் மனதை பொறுத்து இருக்கிறது. அன்றைய நாளில் எப்படி உணர்கிறோம் என்பதை பொறுத்து ரன்கள் வரும். நான் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் நன்றாக விளையாடி வருகிறேன். அதில் பேட்டிங்கில் அடித்த ரன்கள் எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்த்து வருகிறேன். இதே போன்ற ஆட்டத்தை எவ்வளவு நாள் விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம் என அக்சர்பட்டேல் கூறினார்.