147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. நாதன் லயன் யாரும் செய்யாத சாதனை.. முரளிதரன் வார்னேவும் இல்லை

0
249
Lyon

ஆஸ்திரேலியா அணி வேகப்பந்து வீச்சுக்கு எவ்வளவு பிரபலமான அணியாக விளங்கி வருகிறது அதேபோல் சுழல் பந்து வீச்சுக்கும் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பங்களிப்பை செய்து கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் கடந்த காலத்தில் ஷேன் வார்னே ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சு துறையை தனி ஒரு வீரராக வெள்ளைப் பந்து சிவப்பு பந்து என கவனித்துக் கொண்டு வந்தார். மேலும் அவர் உருவாக்கிய தாக்கம் என்பது ஒரு மேஜிக்!

அவருடைய காலத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சுத் துறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் நாதன் லயன் தனி ஒரு வீரராக தாங்கிப் பிடித்து வருகிறார்.

கடந்த வருடத்தின் இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் கடந்த இரண்டாவது ஆப் ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தனித்துவ சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கெட்டும் கைப்பற்றினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்து பெற்ற மிக முக்கியமான மூத்த ஒன்பது கிரிக்கெட் நாடுகளுக்கு எதிராக, அவர்களது மண்ணிலேயே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனையை படித்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் கைப்பற்றிய முரளிதரன் ஆஸ்திரேலியாவிலும், இவருக்கு அடுத்து இருக்கும் ஷேர் வார்னே வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் இதுவரையில் 5 விக்கெட் கைப்பற்றியதில்லை.

இதேபோல் லெஜன்ட் பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும், அனில் கும்ப்ளே பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்திலும், கிளன் மெக்ராத் இந்தியா மற்றும் இலங்கையிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இதுவரையில் ஐந்து விக்கெட் கைப்பற்றியது இல்லை.

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. நியூசியை வீழ்த்தி.. இந்தியாவுக்கு பெரிய உதவி செய்த ஆஸி

எந்தெந்த நாடுகளில் எத்தனை முறை நாதன் லயன் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் ஐந்து கைப்பற்றி இருக்கிறார்? என்பதன் விவரம்:

ஆஸ்திரேலியா – 9
பங்களாதேஷ் – 3
இங்கிலாந்து – 1
இந்தியா – 5
நியூசிலாந்து – 1
பாகிஸ்தான் – 1
சவுத் ஆப்பிரிக்கா – 1
ஸ்ரீலங்கா – 2
வெஸ்ட் இண்டிஸ் – 1