WTC புள்ளி பட்டியல்.. நியூசியை வீழ்த்தி.. இந்தியாவுக்கு பெரிய உதவி செய்த ஆஸி

0
397
WTC

தற்பொழுது 2023-2025 ஆண்டுகளுக்கான இரண்டு ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நடைபெற்று வருகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பொதுவான இடத்தில் இறுதிப்போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து இந்தியா ஆஸ்திரேலியா என மூன்று அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. அனுபவமற்ற இளம் டெஸ்ட் அணியை டி20 லீக்குக்காக அனுப்பி தென் ஆப்பிரிக்கா சரிவை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் வருகின்ற ஏழாம் தேதி விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியால் தொடரை வென்ற பிறகும் எல்லா போட்டிகளும் முக்கியமானது.

தற்பொழுது ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்து மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. போட்டியில் இருக்கும் மூன்று அணிகளுமே தற்பொழுது டெஸ்ட் போட்டி விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு புள்ளி பட்டியலில் முன்னேறி இருந்தது.

தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற நியூசிலாந்து முதல் இடத்துக்கு முன்னேறி இருந்தது. ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்துக்கு இறங்கியது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மோதிய டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றது. இன்று முடிவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றியை இந்திய அணிக்கு புள்ளி பட்டியலில் முதல் இடத்தை கொடுத்திருக்கிறது. நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றன. இங்கிலாந்து அணியை கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீழ்த்தும் பொழுது இன்னும் முதலிடம் பலமானதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வேட்டையாடிய ஆஸ்திரேலியா.. தப்பு கணக்கு போட்ட நியூசிலாந்து.. நாதன் லயன் அசத்தல்.. பிரம்மாண்ட வெற்றி

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

இந்தியா- 64.58
நியூசிலாந்து- 60.0
ஆஸ்திரேலியா- 59.09
பங்களாதேஷ்- 50.0
பாகிஸ்தான்- 36.66
மேற்கிந்திய தீவுகள்- 33.33
தென்னாப்பிரிக்கா – 25.0
இங்கிலாந்து -19.44
இலங்கை – 0.0

- Advertisement -