“பந்தயம் கட்டறேன்.. ரோகித்-பும்ரா ஜோ ரூட்டை விடமாட்டார்கள்” – இங்கிலாந்து நாசர் ஹுசைன் பேச்சு

0
674
Bumrah

இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மட்டுமல்லாமல் உலகக் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நட்சத்திர பேட்ஸ்மேனாக முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்தான் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்களை எட்டுவதற்கான வாய்ப்பில் இருக்கும் தற்போதைய ஒரே வீரராக ஜோ ரூட் மட்டுமே பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தொழில் நுட்பம் வாய்ந்த பேட்ஸ்மேன். ஒருமுறை செய்யும் தவறுகளை இரண்டாவது முறை செய்யாத அளவுக்கும், மேலும் உலகின் எல்லா நாடுகளிலும் ரன்கள் குவிக்க முடிந்த திறமையான பேட்ஸ்மேன்.

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மெக்கலம் பயிற்சியாளராக வந்த பிறகு ஜோரூட்டின் டெஸ்ட் சராசரி 52 என மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால் நாசர் ஹுசைன் பாஸ்பால் முறை ஜோ ரூட்டின் பேட்டிங்கை பாதிப்படையை வைத்து விட்டதாக கருதுகிறார்.

மேலும் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு முறை பும்ரா இடம் ஜோ ரூட் ஆட்டம் இழந்து இருக்கிறார். நடைபெறும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். மொத்தம் நான்கு இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் இரண்டு முறை வெளியேறி இருக்கும் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 29 என்பது, இங்கிலாந்துக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” ஒரு ஓவர் கிடைத்தவுடன் ஒரு பந்துவீச்சாளர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்றால், அது பேட்டிங் தொழில்நுட்ப விஷயத்தை தாண்டி உங்கள் மனநிலை சார்ந்ததாகவும் மாறுகிறது. இந்தத் தொடரில் பும்ரா காயமடைந்தாலோ இல்லை ஜோ ரூட் விரலில் ஏற்பட்ட காயத்தால் விளையாடாமல் போனால்தான் பும்ரா பிரச்சனையாக இருக்க மாட்டார். மற்றபடி எஞ்சி இருக்கும் ஆறு இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட்டுக்கு பும்ரா அச்சுறுத்தல் தருவார்.

ஐந்து டெஸ்ட் தொடர் தொடர்ந்து நடக்கும் பொழுது, அங்கு தனிப்பட்ட இரண்டு வீரர்களுக்கு இடையேயான போட்டிகள் ஏற்படும். குறிப்பாக பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் உடனடியாக ரோகித் சர்மா பும்ராவிடம்தான் செல்வார் என்று பந்தயம் கட்டலாம்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி மறைமுக எதிர்ப்பு.. என்ன நடக்கிறது?

ஜோ ரூட்டுக்கு பாஸ்பால் வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. புள்ளி விபரங்கள் எப்பொழுதுமே உண்மையை சொல்லிவிடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்பொழுது அவருக்கு நல்ல சராசரி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த விவாதம் ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கி விட்டது. நியூசிலாந்து நீல் வாக்னர் பந்தில் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட சென்றார், ஆனால் பந்து ஸ்லிப்பில் சென்று ஆட்டம் இழந்தார். எனவே அப்பொழுதே உருவான பேச்சுதான்” என்று கூறி இருக்கிறார்.