மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி மறைமுக எதிர்ப்பு.. என்ன நடக்கிறது?

0
139
Rohit

கடந்த வருடத்தின் இறுதியில் இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து இழந்தது.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இந்திய அணி உலக கோப்பையை இழந்த கவலை பேச்சுகளை தாண்டிய, புதிய விஷயம் ஒன்று இந்திய கிரிக்கெட்டில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

- Advertisement -

அது, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை எந்த வீரையும் கொடுக்காமல் பணம் மட்டும் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் செய்தது. இது சமூக வலைதளத்தில் அப்போது மிகப்பெரிய பேச்சாக சென்றது.

இந்த பிரச்சினையை சமூக வலைதளத்தில் பேசி முடிப்பதற்குள்ளாகவே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது.

அந்த அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்கள். மும்பை இந்தியன் சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்வதில் இருந்து வெளியேறிதங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்த ஒரு முடிவு என்று கூறியதோடு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை உணர்வு பூர்வமாக அணுகக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

மேலும் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து தள்ளி வைப்பதால், அவருடைய பேட்டிங் இன்னும் நன்றாக மாறும் என்றும், அவர் ஐபிஎல் தொடரில் சிரித்த முகத்தோடு விளையாடவும், குடும்பத்தோடு நேரம் செலவிடவும் முடியும் என்று கூறினார்.

தற்பொழுது இந்த கருத்துக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக ரோஹித் சர்மாவின் மனைவி அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இதில் பல விஷயங்கள் தவறாக செல்கின்றன” என்று அதிரடியாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : AUSvsWI ODI.. 6 ஓவரில் போட்டியை முடித்த ஆஸி.. 8பேர் ஒற்றை இலக்கம்… வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா கேப்டன் விவகாரம் மீண்டும் சமூக வலைதளத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதே சமயத்தில் மினி ஏலம் முடிந்த பிறகு மீண்டும் வீரர்களை டிரேடிங் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரோகித் ஏதாவது அதிரடியான முடிவுகள் எடுக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்.