“என் டார்கெட் இதுதான்.. நிச்சயம் இந்திய டீம்க்கு கம்பேக் பண்ணுவேன்” – ரகானே பேட்டி

0
85
Rahane

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார் ரகானே.

இதன் காரணமாக ஐபிஎல் தொடர் முடிந்து உடனே இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆரம்பித்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்ததால் ரகானேவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மற்ற இந்திய பேட்மன்களை விட சிறப்பான முறையில் ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து உடனே அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயண டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுத்ததோடு துணை கேப்டன் ஆகவும் அறிவித்தார்கள்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரகானே எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. அவர் ஆட்டம் இழந்த முறையில் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருந்தது.

இதற்கு அடுத்து இந்திய அணி உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் விளையாடியது. இதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து ரகானே அதிரடியாக நீக்கப்பட்டார். துணை கேப்டன் பதவி கொடுத்திருந்தும் கூட இந்த நீக்கம் நடந்தது.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் திரும்ப வந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பினார்கள். கேஎல்.ராகுலின் விக்கெட் கீப்பிங் மிகச் சிறப்பான முறையில் அமைந்ததால், அவர் விக்கெட் கீப்பராகவே களம் இறங்கினார். மேலும் ரகானே இடம் அவருக்கு கிடைத்தது.

இதனால் ஏறக்குறைய ரகானேவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. ஆனாலும் அவர் தொடர்ச்சியாக மும்பை மாநில அணிக்கு ரஞ்சி டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார். இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறார்.

இதுகுறித்து ரகானே கூறும்பொழுது “தற்போது என்னுடைய நோக்கம் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதும், அதன் மூலமாக இந்திய அணிக்கு திரும்புவதும்தான் இருக்கிறது. குறிப்பாக நான் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். அதை நோக்கியே எனது திட்டம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது ரகானே 85 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.