“என் முதல் உலகக் கோப்பை பயணம்.. மனசு ஒடிந்து இருக்கோம்..!” – ஸ்ரேயாஸ் வேதனையான பேச்சு!

0
1256
Shreyas

இந்தியாவில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திருவிழா நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்திய தரப்புக்கு மகிழ்ச்சியுடன் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் இதில் சோகமான விஷயம்!

இந்திய அணி கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்த பொழுது கைப்பற்றியது.

- Advertisement -

இதற்கு அடுத்து 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது. இந்த இரண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே இந்திய அணி வென்ற உலகக் கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களாக இருந்து வருகிறது. கடைசி ஒரு தசாப்தமாக இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு ஐசிசி தொடர் கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் பல வகைகளில் பலமாக இருந்தும் கூட இது நடக்காதது, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சோகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் அதற்கு முடிவு கட்டும் விதமாக மிகப்பெரிய உலகக்கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இந்தியாவில் கிடைத்தது. மேலும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்தார்கள். தனிப்பட்ட வீரர்களுக்கு தனிப்பட்ட நிறைய சாதனைகள் வந்தன. ஒட்டுமொத்தமாக இந்திய அணியும் 10 போட்டிகளை வென்று தனிச் சாதனையை அணியாக படைத்தது.

- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் மிடில் ஆர்டரில் அதிக ரன்கள் குவித்தவர் என்கின்ற சாதனையை படைத்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அவருடைய விக்கெட்தான் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது என்றும் கூறலாம்.

தற்பொழுது இது குறித்து கூறியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் “நாங்கள் மிகவும் மனமடைந்து இருக்கிறோம். எனது முதல் உலகக் கோப்பை அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கிறது. உன் வழியில் வந்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

பிசிசிஐ அணி நிர்வாகம், ஆதரவு ஊழியர்கள், எனது அணியினர் மற்றும் ரசிகர்கள், நீங்கள் ஆரம்பத்தில் இருந்து எங்களை ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எனது வாழ்த்துக்கள்!” என்று கூறியிருக்கிறார்!