இன்னும் 217 ரன்.. சச்சினின் மகத்தான சாதனையை முறியடிக்க முஷ்பிகுர் ரஹீமுக்கு வாய்ப்பு.. இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட்

0
116
Mushfiqur rahim and Sachin tendulkar

இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இதன் முதல் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி சுமார் 45 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. வங்கதேச அணியும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தற்போது மிகப்பெரிய நம்பிக்கையோடு இந்திய தொடரில் விளையாட காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு இந்தத் தொடர் வெற்றி பெற வேண்டிய அவசியமான ஒன்றாக உள்ளது.

வங்கதேசம் அணியில் டெஸ்ட் தொடரை பொருத்தவரை அதிக ரன்கள் குவித்தவர் ஆக முஷ்பிகுர் ரஹீம் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 191 ரன்கள் குவித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஒன்பது இன்னிங்ஸ்கள் விளையாடி 136.66 சராசரியில் 820 ரன்கள் குவித்திருந்தார். வங்கதேச அணிக்கு எதிராக சச்சின் ஐந்து சதங்கள் அடித்துள்ள நிலையில் ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக முஷ்பிகுர் 15 இன்னிங்ஸ்கள் விளையாடி 43.14 சராசரியோடு இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 604 ரன்களை குவித்திருக்கிறார்.

எனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இன்னும் 217 ரன்கள் தேவைப்படுகிறது. சச்சினின் சாதனையை முறியடித்தால் இந்திய மண்ணில் அதிக ரன் குவித்த இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைப்பார். அதுமட்டுமல்லாமல் 12 இன்னிங்ஸ்கள் விளையாடி 768 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் யூனிஸ்கான் சாதனையையும் மிஞ்சுவார்.

இதையும் படிங்க:எங்க பிளேயிங் XI இப்படித்தான் இருக்கும்.. இந்த 2 பேர் வெயிட் பண்ணிதான் ஆகணும் – கம்பீர் விளக்கம்

இந்தப் பட்டியலில் இந்தியாவில் 21 இன்னிங்ஸ்கள் விளையாடி 948 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணியின் ஜாவீத் மியான்டட் முதலிடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரஹீமுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை பெறுவதற்கு இன்னமும் 108 ரன்கள் மட்டுமே தேவை. 37 வயதாகி இருக்கும் நிலையில் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5892 ரன்கள் ரஹீம் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -