முசிர் கான் 38 பந்தில் சதம்.. 19 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள்.. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

0
796
Musheer

17ஆவது ஐபிஎல் சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் மூலம் துவங்கியது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாட இருக்கின்றன.

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற சர்பராஸ் கான் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் அதிரடியாக அடித்து, எல்லோரும் அது கவனத்தையும் கவர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முன்பே நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அவரை எந்த அணிகளும் வாங்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாங்கப்பட்டு இருந்த இந்திய இளம் வீரர் ராபின் மின்ஸ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. எனவே அவருடைய இடத்தில் சர்பராஸ் கான் வாங்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை அந்த அணி நிர்வாகம் வாங்கவில்லை.

இதேபோல் அண்டர் 19 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் தம்பி முஷீர் கானையும் எந்த அணிகளும் வாங்கவில்லை. இதற்கு அடுத்து அவர் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக கால் இறுதியில் இரட்டை சதம், அரை இறுதியில் அரை சதம் மற்றும் இறுதிப் போட்டிகள் சதம் என நாக் அவுட் சுற்றில் அபாரமாக விளையாடினார். மேலும் இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ரதாண்டவம் ஆடிய முஷிர் கான்

தற்பொழுது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் எம்சிஏ பிரசிடெண்ட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முஷிர் கான் பய்யடே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக, பிஜே இந்து ஜிம்கானா கிளப் அணிக்கு எதிராக களமிறங்கினார். அவர் இந்த போட்டியில் ஆரம்பம் முதலில் அதிரடியில் மிரட்டினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய முஷிர் கான் வெறும் 38 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தமாக 65 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் உடன் 155 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். இந்தப் போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 238.46. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் வாங்காத பொழுது மிகவும் ஏமாற்றம் அடைந்து இருந்ததாகவும், அவரது தந்தை ரஞ்சி கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற அதில் கவனம் செலுத்தக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ருதுராஜ் கேப்டனா நிரூபிச்சிட்டாரு.. நேத்து இந்த 3 விஷயம் உண்மையிலேயே செம – கவாஸ்கர் பாராட்டு

தற்போது இந்தியாவில் இரண்டு மாத காலம் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் உடன் அதிரடியாக விளையாடவும், அதே சமயத்தில் இடது கை சுழற்பந்து வீசவும் முடிகின்ற முஷீர் கானுக்கு ஐபிஎல் அணிகளில் ஏதாவது வீரர்களுக்கு காயம் ஏற்படும்பொழுது வாய்ப்பு கிடைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது எம்சிஏ பிரசிடெண்ட் டி20 கோப்பையில் 38 பந்தில் அதிரடியாக சதம் அடித்திருக்கின்ற காரணத்தினால், ஐபிஎல் அணிகள் இவர் மீது கவனம் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.