ருதுராஜ் கேப்டனா நிரூபிச்சிட்டாரு.. நேத்து இந்த 3 விஷயம் உண்மையிலேயே செம – கவாஸ்கர் பாராட்டு

0
276
Ruturaj

நேற்று துவங்கிய ஐபிஎல் 17வது சீசனின் ஒட்டுமொத்த பேசுபொருளாக மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும், புதிய கேப்டனாக வந்திருக்கும் ருதுராஜ் கேப்டன் பொறுப்பில் குறிப்பிடும்படி செயல்பட்டு இருப்பதும்தான் இருந்து வருகிறது. இது ஐபிஎல் தொடரின் மற்ற செய்திகளை பின்தள்ளி சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் முன்னணியில் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக தொடரவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்து வருகிறது. அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடுகிறேன் என்று அறிவித்தாலும், அவருடைய ரசிகர்கள் அதை மிகப்பெரிய அளவில் கொண்டாடவே செய்வார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்ட பிறகு, அந்த இடத்திற்கு வந்திருக்கும் ருதுராஜ் கேப்டன்ஷியில் ஓரளவுக்கு மேல் நன்றாக செயல்பட்டு இருப்பதும் மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் தங்கள் அணிக்கு ஒரு இளம் கேப்டன் கிடைத்திருப்பதும், அவர் தங்களுடைய தோனியின் மூலமாக கொண்டு வரப்பட்டு இருப்பதும் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் போட்டியின் முதல் மூன்று ஓவர்களிலேயே அழுத்தத்தை சந்திக்க வேண்டி இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் பவர் பிளேவை பயன்படுத்தி ரன்கள் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அங்கு சரியான பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து அவரது ரன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி இருந்தது.

ருதுராஜின் கேப்டன்சி

இந்த நிலையில் மிகச் சிறப்பாக நான்காவது போவதற்கு தீக்சனாவையும் ஐந்தாவது ஓவருக்கு முஸ்தபிசுர் ரஹ்மானையும் கொண்டு வந்ததோடு, ஆறாவது ஓவருக்கு தீக்சனா இடம் தெரியாமல், மீண்டும் தீபக் சகரிடம் வந்து, அந்த ஓவரில் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி, ஆட்டத்தை முழுமையாக ருதுராஜ் பவர் பிளேவில் கைக்குள் கொண்டு வந்தார். மேலும் கடைசி கட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தினார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” அவர் முஸ்தபிசூரை பயன்படுத்தியது மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. இதேபோல் தீபக் சகரையும் மாற்றிக் கொண்டே இருந்தார். அவர் கடைசி ஓவருக்கு துஷார் தேஷ்பாண்டேவையும் நம்பினார். அவருடைய நம்பிக்கையை துஷார் இறுதி ஓவரின் மிகச் சிறப்பாக வீசி அர்த்தப்படுத்தினார்.

இதையும் படிங்க : வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்.. தோனி எப்பவுமே இதுல தப்பே செஞ்சதில்லை – சுரேஷ் ரெய்னா பேட்டி

நிச்சயமாக ருதுராஜை சுற்றி தோனி இருக்கிறார். அவருக்கு வழி காட்டவும் தேவையானதை சொல்லவும் அவர் எப்பொழுதும் பின் தொடர்கிறார். மகேந்திர சிங் தோனி போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவரின் சின்ன சின்ன தலையீடுகள் ஆட்டத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கக் கூடியது” என்று கூறியிருக்கிறார்.