இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி யார் கையில் இருக்கிறது? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய் பேசி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி வலிமையானதாக இருந்த போதும் கூட அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு வர முடியாமல் போயிருக்கிறது. கீரன் பொல்லார்டு இடத்தை நிரப்ப முடியாததால் அந்த அணி மிகவும் தடுமாறி வருகிறது.
இவர்கள் கையில்தான் உள்ளது
தற்போது தென் ஆப்பிரிக்காவின் ரியான் ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் நிலையில் குயிண்டன் டி காக் இந்த முறை வாங்கப்பட்டு இருக்கிறார். எனவே ரோகித் சர்மா உடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்கள்? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதுகுறித்து முரளி விஜய் பேசும்போது “மும்பை இந்தியன்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் இன்னும் பொறுப்பு எடுத்துக் கொண்டு அவர்களுக்கு கொடுக்கப்படும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தொழில்முறையாக செயல்பட வேண்டும். பொல்லார்டு அவர்கள் அணியில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள்? வெளிநாட்டு வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை பொறுத்தே மும்பை இந்தியன்ஸ் எதிர்காலம் அமையும்”
வலிமையான அணி இருக்கிறது
“அந்த அணியில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா பவுலிங் யூனிட்டில் இருக்கிறார்கள். ஒரு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வந்து விடுகிறார். சிறந்த கேப்டன்களில் ஒருவரான சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார். இதைத் தவிர சிறந்த மிடில் ஆர்டர் திலக் வர்மா மற்றும் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ்ல ஜடேஜாவுக்கு மரியாதை கிடைக்கும்னு நினைச்சேன்.. எதிர்பார்க்காதது நடந்திருக்கு – அஸ்வின் பேச்சு
“இந்த இடத்திலேயே இவர்கள் சிறந்த அணியாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு சரியான வீரர்களை சேர்த்தாலே இவர்கள் தற்போதைய ஐபிஎல் அணிகளில் சிறந்த அணியாக மாறிவிடுவார்கள். குயின்டன் டி காக்கை அடிப்படை விலைக்கு வாங்கியது அவர்கள் செய்த விஷயத்தில் அருமையானது” என்று கூறியிருக்கிறார்.






