ராஜஸ்தான் ராயல்ஸ்ல ஜடேஜாவுக்கு மரியாதை கிடைக்கும்னு நினைச்சேன்.. எதிர்பார்க்காதது நடந்திருக்கு – அஸ்வின் பேச்சு

0
12
Ashwin

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட மரியாதை கொடுக்கப்படும் என தான் எதிர்பார்த்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆரம்பத்தில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு வந்தார். நீண்ட காலமாக சிஎஸ்கே அணிக்கு விளையாடிய அவர் தற்போது மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

யூகங்கள் பொய்யானது

இந்த நிலையில் தன்னுடைய சொந்த அணிக்கு ரவீந்திர ஜடேஜா திரும்பி வந்திருப்பதால் அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை எதிர்பார்த்து ஏமாந்தார் என்பதால், இந்த முறை அவருக்கு அது கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் ரியான் பராக் புதிய கேப்டனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அறிவிக்கப்பட்டார். அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து கேப்டன் பதவிக்கு போராடி வருகிறார். மேலும் அவர் இதற்காக வேறு அணிக்கு செல்லவும் தயாராக இருந்தார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

நான் எதிர்பார்த்தேன்

“ரியான் பராக் உள்நாட்டு கிரிக்கெட்டில் அசாம் அணிக்காக அனுபவம் உள்ள கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் தொடரில் எதிர்காலத்தை யோசித்து கேப்டன் பொறுப்பை கொடுப்பார்கள். இந்த வகையில் ரியான் பராக்கை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்”

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸை விட்டு வெளியே வர நினைச்சார்.. அவர் இப்ப இருக்க காரணம் இதுதான் – அபினவ் முகுந்த் பேச்சு

“அதே சமயத்தில் ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் ஆக்கி ரியான் பராக்கை துணை கேப்டனாக வைத்து வளர்ப்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது வித்தியாசமாக நடந்திருக்கிறது. இருந்தாலும் ரியான் பராக் ரவீந்திர ஜடேஜா மற்றும் குமார் சங்கக்கரா இருவரின் அனுபவம் மற்றும் அறிவுரைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட தொடரில் பல ஏற்ற இறக்கங்கள் இருப்பதை தாக்கு பிடிக்கும் அளவுக்கு கேப்டன் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -