42 ரன் தேவை.. கைவசம் 5 விக்கெட்.. திடீரென சர்துல் தாகூர் செய்த மேஜிக்.. சூரியகுமார் ரகானே ஆறுதல்

0
1233
Shardul

2025 ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி போட்டியில் அரியானா அணிக்கு எதிராக பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் செய்த மேஜிக்கால் மும்பை அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்து இருக்கிறது.

தற்போது ரஞ்சி சீசனின் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் நடப்பு ரஞ்சி சாம்பியன் ரகானே தலைமையிலான மும்பை அணியும் ஹரியானா அணியும் மோதிக்கொண்ட ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்த போட்டியில் ஹரியானா அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கான அருமையான வாய்ப்பை கோட்டை விட்டு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருக்கிறது.

- Advertisement -

ஹரியானா கேப்டன் அசத்தல்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரகானே மற்றும் சூரியகுமார் என அனைவரும் ஏமாற்றம் தந்தார்கள். இந்த நிலையில் சுழல் பந்துவீச்சாளர்கள் சாம்ஸ் முலானி 91, தனுஷ் கோட்டியன் 97 ரன்கள் என கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாட மும்பை அணி 315 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஹரியானா அணிக்கு அந்த அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் அங்கீத் குமார் 206 பந்துகளில் 136 ரன்கள் குவித்தார். ஹரியானா அணி ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 43 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற முடியும் என்கின்ற சூழ்நிலையில் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் வைத்திருந்தது.

- Advertisement -

சர்துல் தாகூர் செய்த மேஜிக்

இந்த போட்டியில் பந்துவீச்சில் மும்பை அணிக்கு முதல் விக்கெட்டை கைப்பற்றி இருந்த சர்துல் தாக்கூர் அதற்கு அடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதைத்தொடர்ந்து ஹரியானா அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்த பொழுது மீண்டும் பந்துவீச்சுக்கு வந்த சர்துல் தாகூர் மிச்சமிருந்த ஐந்து விக்கெட்டுகளையும் கொத்தாக அள்ளி மேஜிக் செய்தார். இதன் காரணமாக ஹரியானா அணி 301 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

இதையும் படிங்க : 5/3.. கம்பீருக்கு அப்ப இத செய்ய தைரியம் இருக்கா?.. இது முட்டாள்தனமான காரியம் – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

இதைத்தொடர்ந்து தற்போது விளையாடி வரும் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரகானே 40 ரன்கள் தாண்டியும் சூரியகுமார் யாதவ் 30 ரன்கள் தாண்டியும் ஆட்டம் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று இருந்தால் போட்டி டிரா ஆனால் கூட அரையிறுதிக்கு செல்ல இருக்க முடியும். ஆனால் இந்த வாய்ப்பை தற்பொழுது ஹரியானா கோட்டை விட்டு இருக்கிறது. மீண்டும் மும்பை அணியை அரையிறுதிக்குள் ஏறக்குறைய சர்துல் தாகூர் பந்துவீச்சில் செய்த மேஜிக்கால் கொண்டு வந்துவிட்டார் என்று கூறலாம்.

- Advertisement -