இந்திய அணியின் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கம்பீர் இந்திய அணியில் செய்து வரும் சில பரிசோதனை முயற்சிகள் குறித்து மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பாக உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. தற்போது இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை மிகச் சிறப்பாக விளையாடிய வென்று தொடரையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இடதுகை பேட்ஸ்மேனால் பிரச்சனை
இந்திய அணிக்கு தற்போது பேட்டிங் யூனிட்டில் முழுமையான பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இடதுகை பேட்ஸ்மேன் கிடையாது. சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே பேட்டிங் யூனிட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருந்து வருகிறார்கள்.
மேலும் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தொடர்கிறார். அதே சமயத்தில் கே எல் ராகுலை தாண்டி இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு தரும் அளவுக்கு, அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இன்னும் தன்னை நிரூபிக்காதவராக இருக்கிறார். இதன் காரணமாக பேட்டிங் யூனிட்டில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் முதல் ஐந்து இடங்களுக்குள் வைப்பதற்கு இந்திய அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது.
கம்பீருக்கு தைரியம் இருக்கிறதா?
இந்தப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலை பேட்டிங் வரிசையில் பயிற்சியாளர் கம்பீர் ஐந்தாவது இடத்தில் இரண்டு போட்டிகளாக அனுப்பி இருக்கிறார். ஒரு போட்டியில் அரை சதம் அடித்தவர், இரண்டாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக கேஎல்.ராகுல் தன்னுடைய இடத்தை விட்டு ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திரம் திடீர் ரூல்டு அவுட்.. ஆர்சிபிக்கு வந்த பிரச்சனை.. முக்கிய தகவல்கள்
இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள டோட்டா கணேஷ் கூறும் பொழுது “பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளத்தில் இந்திய அணி 5 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கும் பொழுது, கே எல் ராகுலுக்கு முன்பாக அக்சர் படேலை அனுப்பும் தைரியம் கம்பீருக்கு இருக்கிறதா? எனக்கு இதை பார்த்து பேச்சே வரவில்லை. உங்களால் நெருக்கடியான சூழ்நிலையில் அக்ச்சர் படேலை கேஎல்.ராகுலுக்கு முன்னால் அனுப்ப முடியாது என்றால், இப்போது செய்து கொண்டிருக்கும் பரிசோதனை அர்த்தமற்றது. இது ஒரு வீண் வேலை” எனக் கூறி இருக்கிறார்.






