106-7 to 290-9.. தமிழக அணியை மிரட்டிய சிஎஸ்கே சர்துல் தாகூர் அதிரடி சதம்.. ரஞ்சி செமி பைனலில் பின்னடைவு

0
449
Shardul

தற்போது ரஞ்சி டிராபி செமி பைனலில் மும்பை அணிக்கு எதிராக தமிழக அணி மும்பையில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற தமிழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த தமிழக அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஸ்பாண்டே மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழக அணிக்கு எடுத்ததும் பெரிய சரிவை உண்டாக்கினார். இந்தச் சரிவில் இருந்து தமிழக அணியால் பேட்டிங்கில் கடைசி வரை மீள முடியவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிசை நேற்று துவங்கிய மும்பை அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணி முதல் செஷன் முடிவில், சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, மேலும் ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 106 ரன்களுக்கு 7 விக்கெட் என்கின்ற பரிதாப நிலைமையில் இருந்தது.

இந்த நிலையில் ஹர்திக் தாமோர் உடன் சிஎஸ்கே அணிக்காக இந்த முறை ஏலத்தில் வாங்கப்பட்டு இருக்கிற சர்துல் தாக்கூர் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப்பில் சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இந்த ஜோடி 106 ரன்களில் இணைந்து 211 ரன்களில் பிரிந்தது. இந்த ஜோடி மொத்தமாக 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, மும்பை அணிக்கு 50க்கும் மேற்பட்ட ரன்களை லீடிங் எடுத்துக் கொடுத்தது. ஹார்திக் தாமோர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனுஷ் கோட்டியன் விளையாட வந்தார். தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய சர்துல் தாக்கூர் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் மும்பை அணி 290 ரன்கள் எடுத்திருந்தபோது, 105 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் சாதனை வீரர் ராபின் மின்ஸ் சாலை விபத்து.. தந்தை தெரிவித்த உண்மை நிலவரம்

தற்பொழுது மும்பை அணி ஒன்பது விக்கட்டுகளை இழந்து 300 ரன்களை தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி வெல்ல வேண்டும் என்றால், இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் முடியாது. எனவே தமிழக அணியின் ரஞ்சி இறுதிப் போட்டி கனவு மெல்ல மெல்லமாக கலைந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிஎஸ்கே-வின் துஷார் தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.