மும்பை ரோகித் பஞ்சாயத்து.. கப்பை விட இதான் முக்கியம்.. ஆர்சிபி அதிரடி உள்குத்து பதிவு!

0
462
RCB

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளில் மிக மோசமான செயல்பாட்டை வைத்திருக்கும் ஒரு அணி பஞ்சாப். அதன் காரணத்தால் அந்த அணியின் சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு மிகவும் கீழேதான் இருக்கிறது.

இதற்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய அணி டெல்லி. இந்த அணியும் கோப்பையை வெல்லாத காரணத்தினால் சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாமல் சுமாரான செயல்பாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஆனால் கோப்பையை வெல்லாதது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சந்தை மதிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியது கிடையாது.

இதற்கு மிக முக்கியமாக இருப்பது அவர்கள் சில முக்கிய வீரர்களை வாங்கினால் எப்போதும் இழப்பது கிடையாது. விராட் கோலி ஆரம்பத்திலிருந்து அணி மாறாமல் ஒரே அணிக்காக விளையாடுகிறார்.

மேலும் அந்த அணிக்கு டிவிலியர்ஸ் இன்னொரு அடையாள வீரராக இருக்கிறார். கிரீஸ் கெயில் சிறிது காலம் அவர்களுக்கு இருந்தார். இப்படி அதிரடியான நட்சத்திர வீரர்களையும், எந்தத் தோல்வியிலும் அசராத ரசிகர்களையும் வைத்து, கோப்பையையே வெல்லாமல், கோப்பையை பலமுறை வென்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு பெங்களூர் அணி சவால் கொடுத்து வருகிறது.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் களம் மிகவும் கொதிப்பாக காணப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்ததும், மும்பை இந்தியன் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மாவை, ஹர்திக் பாண்டியாவுக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதும், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இப்படியான பொதுவான நிலையில் மேலும் ஐபிஎல் களத்தை பொதுப்படைய வைக்கும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு பதிவேற்றப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோ பதிவின் தலைப்பில் “விசுவாசமே ராயல்டி.. சிறந்த மற்றும் விசுவாசமான ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தளராத ஆதரவிற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்!” என்று பதிவிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் விராட் கோலி பிரதானமாக இருக்கிறார்.

இதன் மூலம் விராட் கோலிக்காக இருக்கும் ரசிகர்களுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்று சூசகமாகத் தெரிவித்து இருக்கிறது. அதாவது ரோகித் சர்மாவுக்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இப்படி இல்லை என்பதை உள்குத்தாகப் பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!