பும்ராவின் 19வது ஓவரில் நிகழ்ந்த மேஜிக்.. ஹாட்ரிக் ரன் அவுட்டில் சரிந்த டெல்லி அணி.. 12 ரன்னில் மும்பை திரில் வெற்றி

0
275

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 3 விக்கட்டுகள் விழுந்த நிலையில் டெல்லி அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

மும்பை டெல்லி மோதல்

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டில்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 12 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதற்குப் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் ரிக்கல்டன் உடன் ஜோடி சேர்ந்து போட்டியை நன்றாக கொண்டு சென்றனர்.

இதில் ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெளியேற, சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் இறுதிவரை போராடிய திலக் வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மும்பை அணி பரபரப்பான வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. இதில் தீபக் சகாரின் பந்துவீச்சில் முதல் பந்தியிலேயே ஜேக் பிரேசர் ஆட்டம் இழந்து வெளியேற, இம்பாக்ட் பிளேயராக கொண்டுவரப்பட்ட கருண் நாயர் தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக மும்பை அணியின் நம்பர் ஒன் வந்து வீச்சாளரான பும்ராவின் பவுலிங்கில் 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்த அவர் இறுதியாக 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 89 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அக்சார் பட்டேல் 9 ரன், கே எல் ராகுல் 15 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, போட்டி கொஞ்சம் கொஞ்சமாக மும்பை அணியின் பக்கம் மாறியது.

இதையும் படிங்க:2555 நாட்களுக்குப் பின்.. ஐபிஎல் தொடரில் தரமான சம்பவம்.. நம்பர் 1 பவுலர் பும்ராவின் பவுலிங்கை வெளுத்த கருண் நாயர் 2.0

பின் 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரை பும்ரா வீச, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் அசுத்தோஸ் சர்மா பவுண்டரி அடித்து போட்டியை டெல்லி பக்கம் திருப்பினார். ஆனால் நான்காவது பந்தில் இரண்டாவது ரன்னுக்கு ஓட முயற்சித்து ரன் அவுட் ஆகி அசுதோஸ் சர்மா வெளியேற, அதற்குப் பிறகு குல்தீப் யாதவ் மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் ரன் அவுட் ஆகி வெளியேறனார்கள். இதனால் டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 193 ரன்கள் குவித்து 12 ரன் வித்தியாசத்தில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும்.

- Advertisement -