“குஜராத்துக்காகவே மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் ஏலத்தில் இந்த விஷயத்தை செய்யும்!” – பிராட் ஹக் சுவாரசிய தகவல்!

0
1295
Hogg

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசனுக்கான மினி ஏலம் நாளை மதியம் துபாயில் நடைபெற இருக்கிறது.

மெகா ஏலம் நடைபெற்று முடிந்து மூன்றாவது ஆண்டு என்கின்ற காரணத்தினால், இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் நிறைய பேர் இருக்க மாட்டார்கள். இருக்கக்கூடிய சில முக்கிய வீரர்களை சுற்றிய 10 அணிகளும் சுழலும்.

- Advertisement -

மேலும் சில அணிகள் இதுவரை இந்தியாவுக்கும், ஐபிஎல் தொடரிலும் விளையாடாத இந்திய இளம் வீரர்கள் சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை வாங்குவதற்காக காத்திருக்கும்.

இப்படியான நிலையில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் பஞ்சாப் திங்ஸ் அணிகள் ஏலத்தில் எவ்வாறு செல்வார்கள் என்று, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு நட்சத்திரம் பிராடு ஹக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தற்பொழுது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். அவர்களிடம் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து செயல்பட இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவை. அவர்கள் முதலில் கோட்சிக்கு செல்வார்கள். அடுத்து லான்ஸ் மோரிசுக்கு செல்வார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரையும் அவர்களால் வாங்க முடிந்தால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகுந்த சவாலாக இருப்பார்கள். ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி சமநிலை கொண்ட அணி. எனவே அவர்களுடன் போட்டியிட இந்த வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவை.

கொல்கத்தா அணி நிறைய வீரர்களை வெளியே விட்டு இருக்கிறது. எனவே நிறைய வீரர்களை வாங்க வேண்டும். அவர்கள் கம்மின்ஸ் இடம் செல்லலாம். அதேபோல் இந்திய வேகப்பந்து பேச்சாளர்கள் கார்த்திக் தியாகி மற்றும் ஹர்சல் படேலிடமும் செல்லலாம்.

பஞ்சாப் கிங்ஸ் அணி எப்படி செயல்படுவார்கள் என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு கடந்த வருடம் வேகப்பந்து வீச்சில் நாதன் எல்லீஸ் மட்டுமே நன்றாக செயல்பட்டார். ரபடா வரை சரியாக செயல்படவில்லை. எனவே அவர்கள் ஜோஸ் ஹேசில்வுட்டுக்கு செல்வார்கள்!” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!