ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பின் கடப்பாரை அணியான மும்பை இந்தியன்ஸ்.. முழுவீரர்கள் பட்டியல்

0
11862
MI

ஐபிஎல் ஏலம் என்றாலே அதில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் தொலைநோக்காகவும், அதேசமயத்தில் அதிரடியாகவும் செயல்படும். அவர்கள் ஏலத்தில் என்ன மாதிரியான திட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்று எதிர் முகாம்களால் கண்டறியவே முடியாது.

தற்பொழுது நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திலும் மும்பை இந்தியன் அணி நிர்வாகம் மீண்டும் தன்னுடைய பாணியில் வந்து அசத்தி இருப்பதோடு, அவர்கள் அணி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பாகவே வலிமையாக காணப்பட்டது. ஹர்திக் பாண்டியா உள்ளே வந்ததால், ஒரே நேரத்தில் அவர்களுக்கு ஒரு ஃபினிஷர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் என இருவர் கிடைத்தார்கள். இதனால் அவர்கள் திடீரென குறைகள் மறைந்து வலிமையானவர்கள்.

இந்த நிலையில் ஏலத்திற்கு முன்பாக அவர்களுக்கு நல்ல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ஓரிருவர் மற்றும் ஒரு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் தேவைப்பட்டார்கள்.

இந்த நிலையில் 5 கோடிக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி, 4 கோடி ரூபாய்க்கு இலங்கையின் மதுசங்கா, 4.80 கோடி ரூபாய்க்கு இலங்கையின் குட்டி மலிங்கா நுவன் துசாரா ஆகியோரை வாங்கி அசத்தினார்கள். மேலும் அடிப்படை விலையில் மணிக்கட்டு இந்திய சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலை வாங்கினார்கள்.

- Advertisement -

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் 17 இந்திய வீரர்கள் மற்றும் எட்டு வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். ஒட்டுமொத்தமாக இதிலிருந்து ஒரு பிளேயிங் லெவனை உருவாக்கிப் பார்த்தால், இந்த முறை கோப்பையை வெல்லக்கூடிய முதன்மையான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியே இருக்கிறது. துறை ரீதியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் யார் என்று முழுதாகப் பார்க்கலாம்!

பேட்ஸ்மேன்கள் :
ரோஹித் சர்மா, திலக் வர்மா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், விஷ்ணு வினோத், டிம் டேவிட் மற்றும் டிவால்ட் பிரிவியஸ்.

ஆல் ரவுண்டர்கள் :
கேப்டன் ஹர்திக் பாண்டியா, அர்ஜுன் டெண்டுல்கர், ரோமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, சாம்ஸ் முலானி, நெகேல் வதேரா, அன்சூல் காம்போச், நமன் திர் மற்றும் சுமித் குமார்

பந்துவீச்சாளர்கள் :
ஜஸ்பிரித் பும்ரா, பியூஸ் சாவ்லா, குமார் கார்த்திகேயா சிங், ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹரேன்டாப், தில்சன் மதுசங்கா, ஜெரால்ட் கோட்சி, ஸ்ரேயாஸ் கோபால், நுவன் துஷாரா மற்றும் சிவாலிக் சர்மா.