21 வருடம்.. 13,000 ஆண்கள் டி20 போட்டி.. மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் செய்யாத சாதனை.. மாஸ் ரெக்கார்ட்

0
256
MI

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் உலக டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்த நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 27 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் 23 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த போட்டியில் திரும்பி இருக்கும் சூரியகுமார் யாதவ் 2 பந்துகள் சந்தித்து ரன் இல்லாமல் வெளியேறினார். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் முன்கூட்டியே வந்த ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா ஐந்து பந்தில் ஆறு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்பு டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ செப்பர்ட் இருவரும் இணைந்து வெறும் 13 பந்துகளில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டிம் டேவிட் 21 பந்தில் 45* ரன்கள், ரொமான்டிவ் செப்பர்ட் பத்து பந்தில் அதிரடியாக 39* ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்கள், இசான் கிஷான் 42 ரன்கள், டிம் டேவிட் 41 ரன்கள் எடுத்தார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் மற்றும் ரொமரியோ செப்பர்ட் 39* ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்த போட்டியில் ஒருவர் கூட 50 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் எடுக்கவில்லை.

- Advertisement -

இந்த வகையில் ஒரு டி20 அணியில் ஒருவர் கூட 50 ரன்கள் எடுக்காத பொழுது, அந்த அணி எடுத்த மிக அதிகபட்ச ரன்னாக 234 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிவாகி இருக்கிறது. இது உலக டி20 கிரிக்கெட்டில் உலகச் சாதனையாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : 4,6,6,6,4,6.. 13 பந்தில் 53 ரன்.. 390 ஸ்ட்ரைக் ரேட்.. ரொமாரியோ ஷெப்பர்ட் ஐபிஎல் வரலாற்றில் தனி சாதனை

ஆண்கள் டி20 கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டு 21 வருடங்கள் ஆகிறது. இந்த வருடங்களில் மொத்தம் 13 ஆயிரம் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நடந்திருக்கிறது. இதில் ஒருவர் கூட அரை சதம் அடிக்காமல், ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன், தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக எடுத்திருக்கும் 234 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.