மும்பை இந்தியன்ஸ் ரோகித் ஹர்திக் ஈகோ மோதலா? என்ன செய்யனும்? – யுவராஜ் சிங் நேரடியான பேச்சு!

0
421
Yuvraj

கடந்த வருடத்தின் இறுதியில் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை இழந்ததை தாண்டி, ஐபிஎல் களம் தீ பற்றி எரிந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அமைந்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹரிதை பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எந்த வீரையும் கொடுக்காமல் டிரேடிங் செய்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இந்த டிரேடிங் முறை சரியானதா? என்று சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருந்த பொழுதே, 2024 ஐபிஎல் சீசனுக்கு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்து மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது.

இது அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய விவாத பொருளாக மாறி, பலதரப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தினம் எழுதப்பட்டு வந்தன. மேலும் டிரேடிங் காலம் இன்னும் தொடர்வதால் ரோகித் சர்மா மற்றும் பும்ரா வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் பேசப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடத்திய விதம் சரியற்ற ஒன்று எனவும், இதனால் ரோஹித் சர்மா மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மா இடையே ஈகோ போர் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இடம் கேள்வி கேட்ட பொழுது “வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடும் பொழுது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். இருவருக்குள்ளும் அப்படியே ஏதாவது இருந்தால் உட்கார்ந்து பேசி பிரச்சனைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடும் போதெல்லாம், பந்துவீச்சின் காரணமாக அவருக்கு ஏற்படும் பணிச்சுமையை, ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா மிக அழகாக நிர்வகித்து வந்தார். இந்த விஷயத்தில் அவர் மிகவும் முக்கியமானவர்.

மேலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இறுதிக்கட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நான்காவது இடத்தில் வந்து ஒரு முழு பேட்ஸ்மேன் ஆகவே அந்த ரோலை செய்தார்” என்று கூறியிருக்கிறார்.